சில மாதங்களுக்கு முன்பு பரவை முனியம்மா அவர்கள் உடல்நிலை சரியில்லாமல் இருந்த போது நடிகர் அபி சரவணன் பரவை முனியம்மா அவர்களை மருத்துவ மனையில் சேர்த்து உடல்நிலை சரியாகும் வரை அவரை கவனித்து கொண்டார்.

இந்நிலையில் கடந்த வாரம் அபி சரவணன் – வெண்பா நடிப்பில் வெளியான மாயநதி திரைப்படம் அனைவரின் வரவேற்பையும் பாராட்டையும் பெற்றது.

இதனை கேள்விப்பட்ட பரவை முனியம்மா அவர்கள் மாயநதி படத்தை அபி சரவணன் குடும்பத்தினருடன் சேர்ந்து மதுரையில் பார்த்தார்.

நீண்ட நாட்கள் கழித்து தியேட்டரில் படம் பார்த்த அனுபவம் மனதிற்கு நிம்மதி அளிக்கும் வகையில் இருப்பதாக தெரிவித்தார். மேலும் மாயநதி திரைப்படத்தினை பார்த்து அபி சரவணனை வெகுவாக பாராட்டினார்.

அபி சரவணனுடன் ‘மாயநதி’ படம் பார்த்தார் பரவை முனியம்மா!

About The Author

Related Posts

Leave a Reply

Your email address will not be published.