இந்திய திரையுலகில் பிரபலமாக வளர்ந்து வரும் தமிழ் பின்னணி பாடகி தர்ஷனா KT, இவர் ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரகுமானினால் தமிழ் திரை உலகிற்கு அறிமுகப் படுத்தப்பட்டார்,

அழகிய தமிழ் மகன் படத்தில் “மதுரைக்கு போகாதடி” பாடலின் மூலம் அறிமுகமான இவர் ஓகே கண்மணியில் “காரா ஆட்டக்காரா” , “தீர உலா”, காஞ்சனா 2 வில் “கருப்பு பேரழகா”, ஓகே கண்மணி ஆந்திர மொழியில் “மெண்டல் மனதில்” மற்றும் இந்தியில் பல பாடல்களை பாடியுள்ளார்,இவருடைய பல பாடல்கள் film fare மற்றும் Siima விருதுகளுக்கு பரிந்துரை செய்யப்பட்டது, தற்போது இவர் ஏ.ஆர்.ரகுமான் இசையில் “99” என்ற Cover ஆல்பத்தை Hangdrum என்ற புதிய இசை கருவியை பயன்படுத்தி இந்த பாடலை உருவாக்கியிருக்கிறார், ஏ.ஆர்.ரஹ்மானிடம் பல பாடல்களை பாடியிருந்தாலும் இவர் உருவாக்கிய 99 என்ற கவர் ஆல்பம் ஏ.ஆர்.ரஹ்மானை மிகவும் ஈர்த்துள்ளது.

ஏ.ஆர்.ரகுமான் அவர்கள் இந்த ஆல்பத்தை சமூகவலைத்தளங்களில் பார்த்தது மட்டும் இல்லாமல் அவருடைய சொந்த social media வில் பகிர்ந்தது, எனக்கு புதிய உற்சாகத்தையும் அடுத்தகட்ட இடத்திற்கு நான் செல்வதற்கு உறுதுணையாக இருக்கும் என நம்புகிறேன்…

Leave a Reply

Your email address will not be published.