எஸ் டி ஆர், கௌதம் கார்த்திக் இணைந்து நடிக்கும் “பத்து தல” படத்தில் தொடர்ந்து இணைந்து நடிகர் பட்டாளத்தால் ரசிகர்களிடத்தில் பெரும் கவனம் ஈர்த்து வருகிறது. நடிகை ப்ரியா பவானி சங்கர், டீஜே, மனுஷ்யபுத்திரன் போன்ற மாறுபட்ட நட்சத்திர கூட்டணியில் தற்போது நடிகர் கலையரசன் மிக முக்கிய கதாப்பாத்திரத்தில் ஒப்பந்தமாகியுள்ளார். படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.

இது குறித்து இயக்குநர் ஓபிலி. N.கிருஷ்ணா கூறியதாவது…

மிகவும் கனமான ‘அமீர்’ எனும் கதாப்பாத்திரத்தில் இப்படத்தில் நடிக்கிறார் கலையரசன். இக்கதாப்பாத்திரம் படத்தில் சிறிதளவு நேரமே வந்தாலும் கதையில் நிறைய அழுத்தம் தரும் பாத்திரம் ஆகும். பிரபல நடிகராகவும், முதன்மை கதாப்பாத்திரத்தில் நடித்த அனுபவம் கொண்டவராகவும் உள்ளவரை நடிக்க வைக்க நினைத்தேன். கலையரசனை அணுகும்போது முதலில் இப்படத்திற்கு ஒப்புக்கொள்வாரா என்கிற சந்தேகம் இருந்தது. ஆனால் படத்தில் கதாப்பாத்திரத்தின் அழுத்தம் அறிந்து அவர் உடனடியாக ஒப்புக்கொண்டார்.

தயாரிப்பாளர் K.E.ஞானவேல்ராஜா ஸ்டுடியோ க்ரீன் ஃபிலிம் (Studio Green Films ) நிறுவனம் சார்பில் இப்படத்தினை தயாரிக்க, “சில்லுன்னு ஒரு காதல், நெடுஞ்சாலை” படப்புகழ் இயக்குநர் ஓபிலி. N.கிருஷ்ணா இப்படத்தை இயக்குகிறார். படத்தின் படப்பிடிப்பு வரும் கோடை காலத்தில் துவங்க திட்டமிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.