சென்னை, செப். 18- த.மா.க.வின் மூத்த தலைவரும், தமிழக மணல் அள்ளும் இயந்திர உரிமையாளர்கள் சங்கத் தலைவருமானவர் கத்திப்பாரா ஜனார்த்தனன். இவரது மகன் விவேக்கின் திருமணம் கடந்த ஞாயிறன்று நடைபெற்றது. இதன் வரவேற்பு விழாவில், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் நேரில் சென்று மணமக்களை வாழ்த்தினர்.

மேலும், இந்த விழாவில் தி.க. தலைவர் கி.வீரமணி, முன்னாள் மத்திய அமைச்சர்கள் பொன்.ராதாகிருஷ்ணன், ஏ.கே.மூர்த்தி, வி.சி.க. தலைவரும். சிதம்பரம் எம்.பி.யுமான திருமாவளவன், முன்னாள் மேயர் சைதை துரைசாமி, தி.மு.க.எம்.எல்.ஏ. பி.கே.சேகர்பாபு, காங்கிரஸ் பிரமுகர் ராயபுரம் மனோ உள்ளிட்ட முக்கியஸ்தகர்கள் நேரில் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினர்.

Leave a Reply

Your email address will not be published.