கொரோனா வைரஸ் பரவலால் உலகமே திக்கு முக்காடி போய்க் கொண்டிருக்கும் நிலையில் காவல் துறையினர் தங்கள் உயிரை துச்சமென கருதி பொதுமக்களுக்கு சேவையாற்றி வருகின்றனர். ஆனால், திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் தனது செயல்கள் மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறார்.

புகார் அளிக்கப்பட்ட 72 மணி நேரத்திற்கு பிறகு ஒவ்வொரு புகார்தாரரிடமிருந்து வழக்கு விசாரணை பற்றி கருத்து கேட்டு நடவடிக்கை எடுத்து வருகிறார். காணொளிக்காட்சி மூலம் துணை காவல் கண்காணிப்பாளர், ஆய்வாளர்கள், வழக்குரைஞர் ஆகியோருடன் அவ்வப்போது கலந்தாலோசனை செய்து வருகிறார். அம்மாவட்ட திருநங்கையர்களும் காவல்துறையுடன் இணைந்து கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இச்செயலைக் கண்டு அனைவரும் பாராட்டி வரும் நிலையில், கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா,

மக்கள் அளிக்கும் புகார் குறித்து புகார்தாரர்களிடம் கருத்துக்களைக் கேட்க போன் அழைப்புகள் தொடங்கியதற்காக எஸ்.பி. விஜயகுமாருக்கு ரெய்னா தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும், இது அற்புதமான முயற்சி. இந்த செயல்முறைகளை மேலும் செம்மைப்படுத்துவதில் காவல்துறையினருக்கு உதவுவதோடு குடிமக்களுக்கு அதிக ஊக்கமளிக்கும் என்றார்.

Leave a Reply

Your email address will not be published.