நாடோடிகள் 2 திரைப்படம் வெளியாகும் நிலையில் ,கொம்பு வச்ச சிங்கம்டா, கென்னடி கிளப் படங்களில் நடித்து வருகிறார் இயக்குனர் /நடிகர் சசிகுமார். இதனை தொடர்ந்து தற்போது புதிய படம் ஒன்றில் நடிக்கிறார் சசிகுமார்.நடிகை நிக்கி கல்ராணி கதாநாயகியாக நடிக்கிறார்.மேலும் ராதா ரவி ,தம்பி ராமைய்யா ,விஜய குமார் ,ரேகா,சுமித்ரா , சதிஷ் ,மனோபாலா ரமேஷ் கண்ணா ,சிங்கம் புலி ,நிரோஷா ,யோகி பாபு போன்ற 30 க்கும் மேற்பட்ட கலைஞர்கள் நடிக்கிறார்கள்.

இன்னும் பெயரிடப்படாத இப்படத்தை, இயக்குனர் சுந்தர்.சி யிடம் உதவியாளராக இருந்த கதிர்வேலு என்பவர் இயக்குகிறார். இந்த படம் சசிகுமாருக்கு 19 படமாகும். இப்படத்தில் சசிகுமார் IT இல் பணிபுரியும் நபராக வித்யாசமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.செந்தூர் பிலிம்ஸ் சார்பில் டிடி.ராஜா என்பவர் தயாரிக்கிறார். சித்தார்த் ஒளிப்பதிவு செய்ய, சாம்.சிஎஸ் இசையமைக்கிறார்.கலை இயக்கம் சுரேஷ் மற்றும் படத்தொகுப்பினை சபு ஜோசப் செய்யகின்றனர்.

(நிர்வாக தயாரிப்பு N .சிவகுமார் , தயாரிப்பு மேற்பார்வை பாண்டியன் பரமசிவம் ) இப்படத்தின் படப்பிடிப்பு பொள்ளாச்சியில் வருகின்ற 11 ஆம் தேதி முதல் நடைபெற இருக்கிறது.

நடிகர் & நடிகைகள் :

சசிகுமார் ( Hero) நிக்கி கல்ராணி ( Heroine) தம்பி ராமைய்யா ,யோகி பாபு,கும்கி அஸ்வின் ,சதிஷ் ,ஆடம்ஸ் ,ராதா ரவி ,சந்தான லட்சுமி ,சரவணா சக்தி ,சசிகலா ,மணி ,யமுனா, சிலம்பம் சேதுபதி ,ரமணி ,விஜய குமார் ,சுமித்ரா ,ராஜ் கபூர் ,ரேகா ,தாஸ் , மணி சந்தனா ,நமோ நாராயணன் ,மணி மேகலை,மீரா ,மனோபாலா, லாவண்யா ,சிங்கம் புலி, சுந்தர் ,ரஞ்சனா, நிரோஷா , ரமேஷ் கண்ணா, சமர் ,ரஞ்சிதா ,ரம்யா ,சாம்ஸ் ,தீபா கிரி

தொழில்நுட்ப குழு :

இயக்கம் : K .கதிர்வேலு

ஒளிப்பதிவாளர் : சித்தார்த்

இசை : சாம் C .S

படத்தொகுப்பு : V .J சபு ஜோசப்

கலை இயக்கம் : சுரேஷ்

நிர்வாக தயாரிப்பு : N .சிவகுமார்

தயாரிப்பு மேற்பார்வை : பாண்டியன் பரமசிவம்

தயாரிப்பு : T .D ராஜா

மக்கள் தொடர்பு : ரியாஸ் கே அஹ்மத்

About The Author

Related Posts

Leave a Reply

Your email address will not be published.