தனது பெயரில் உலவி வரும் ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கம் போலியானது என்று இயக்குநர் விஷ்ணுவர்தன் தெரிவித்துள்ளார்.

குறும்பு படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர் விஷ்ணுவர்தன். தொடர்ந்து, அறிந்தும் அறியாமலும்',பட்டியல்’, சர்வம்' உள்ளிட்ட படங்களை இயக்கினார். இதனைத்தொடர்ந்து தல அஜித்தை வைத்துபில்லா’ என்ற பிரம்மாண்ட படத்தை இயக்கினார். இந்தப்படம் மாபெரும் வெற்றிப்பெற்றதை அடுத்து அறியப்பட்ட இயக்குநர்கள் பட்டியலுக்கு இடம்பெயர்ந்தார் விஷ்ணுவர்தன். மேலும் பில்லா அஜித்தின் கெரியரிலும் திருப்புமுனையாக அமைந்தது.

அதன்பிற்கு மீண்டும் அஜித்தை வைத்து ஆரம்பம்' , கடைசியாகயட்சன்’ போன்ற படங்களை இயக்கியிருந்தார். அதனைத்தொடர்ந்து 3 வருடங்களாக எந்தப் படங்களையும் இயக்காத விஷ்ணுவர்தன் பாலிவுட்டில் கால் பதித்தார். கார்கில் போரின்போது வீர மரணம் அடைந்த கேப்டன் விக்ரம் பத்ராவின் வாழ்க்கையை மையப்படுத்தி ஷேர்ஷா எனும் படத்தை இயக்கியுள்ளார். பாலிவுட் நடிகர் சித்தார்த் மல்கோத்ரா, கியாரா அத்வானி ஆகியோர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர்.

இந்நிலையில் இயக்குநர் விஷ்ணுவர்தனும், சமூக வலைதளங்களில் தனது பெயரில் போலிக்கணக்குகள் செயல்படுவதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ள அவர், எச்சரிக்கை.. நான் ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டகிராம் பக்கங்களை பயனடுத்தவில்லை. இவை இரண்டும் போலியானவை.. யாரோ ஆள்மாறாட்டம் செய்து எனது பெயரை தவறாக பயன்படுத்துகிறார்கள். அந்தக் கணக்குகளை போலியானவை என்று புகாரளியுங்கள் மேலும் அவற்றை பின்தொடர வேண்டாம்” என்று தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.