தென் மாவட்ட மண்ணின் மைந்தர்களின் வாழ்வியலை யதார்த்தமாக சொல்லி அதில் வீரம், கோபம் , குடும்ப உறவு,நட்பு, காதல் என அனைத்தும் கலந்து சமூக அக்கறையோடு கதை களம் அமைக்கப்பட்டுள்ளது. முக்கிய அம்சமாக உள்ளாட்சி தேர்தலும் அதில் தலைதூக்கும் சாதி அரசியலும் நேரடியாகவும் மறைமுகமாகவும் அரங்கேறும் சம்பவங்களும் ரத்தமும் சதையுமாக கலந்து சமத்துவம், தனித்துவம் மனித நேயம் அனைத்தும் சொல்லப்பட்டுள்ளது.

பி.டி.கே பிலிம்ஸ் சார்பில் பி.டி.அரசக்குமார் தயாரிக்கும் இப்படத்தில் ஸ்ரீராம் கார்த்திக், மீனாட்சி சர்கார் கதையின் நாயகன் நாயகியாக நடிக்க மற்றொரு புதுமுக நாயகி சத்யா, அனுகிருஷ்ணா, குட்டிப்புலி, கொம்பன் புகழ் ராஜசிம்மன், வேன்மைக்கேல் டேவிட் (அறிமுகம்), கஞ்சா கருப்பு, பெஞ்சமின், ஆதேஷ் பாலா, பிரேம்சங்கர், வேல்முருகன், சின்ராசு, கருத்தம்மா ராஜஸ்ரீ, சோனா, ரேஷ்மி, லேகா ஸ்ரீ, உமா ஆகியோர் நடித்து வருகின்றனர்.

ஒளிப்பதிவு – எம்.தங்கபாண்டியன்,

இசை -விஜய் மந்தாரா

பாடல்கள்- விவேகா, எ.மு.ராதா, அன்பு சரவணன்

எடிட்டிங் – ராஜ் கீர்த்தி
நடனம் – ரவிதேவ், பவர் சிவா
ஸ்டண்ட் – தீப்பொறி நித்யா

இணைத்தயாரிப்பு – எஸ்.என்.சுரேஷ்

தயாரிப்பு – பி.டி.அரசகுமார்

கதை திரைக்கதை வசனம் இயக்கம் –
அன்பு சரவணன்

இதன் நிறைவுகட்ட படப்பிடிப்பு சென்னை அருகே நடைபெற்று வருகிறது.

பி.ஆர்.ஓ

கிளாமர் சத்யா

சிவப்பு மனிதர்கள் தென் மாவட்டங்களில் நடந்த உண்மைச் சம்பவங்களின் பின்னணி

Leave a Reply

Your email address will not be published.