டென்னிஸ் மஞ்சுநாத் இயக்கத்தில் பிரவீன், சுனைனா, யோகி பாபு, கருணாகரன் ஆகியோர் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘ட்ரிப்’ படத்தின் சேட்டிலைட் மற்றும் டிஜிட்டல் உரிமையை சன் டிவி நிறுவனம் கைப்பற்றியுள்ளது.
வி.ஜே.ராஜேஷ், அதுல்யா சந்திரா, லட்சுமிப்பிரியா, கல்லூரி வினோத், வி.ஜே.சித்து, ஜெனிஃபர் மற்றும் ராஜேஷ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கும் ‘ட்ரிப்’ கொரோனா காலத்திற்கு பிறகு திரைக்கு வர இருக்கிறது.
இப்படத்துக்கு சித்து குமார் இசையமைத்திருக்கிறார். ‘சிவப்பு மஞ்சள் பச்சை’ படப்புகழ் உதய் சங்கர் ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்துக்கு தீபக் படத்தொகுப்பு செய்திருக்கிறார். கலை இயக்குநராக பாக்யராஜும், சண்டைப் பயிற்சியாளராக டேஞ்சர் மணியும் பணியாற்ற்றியுள்ளனர்.
பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் இப்படத்தின் சேட்டிலைட் மற்றும் டிஜிட்டல் உரிமையை சன் டிவி நிறுவனம் கைப்பற்றியிருக்கிறது. இது படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.
Leave a Reply