தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்களின் இன்றைய சூழ்நிலை  குறித்து சென்னையில் தயாரிப்பாளர்கள் பாரதிராஜா , எஸ்.ஏ.சந்திரசேகர், கேயார், முரளிதரன் ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர்.

பாரதிராஜா கூறுகையில்
 , “தயாரிப்பாளர் சங்கத்திற்கு தேர்தல் என்பது தேவை இல்லை. ஒற்றுமை இல்லாமல்  பல அணிகளாக பிரிந்து நிற்கிறார்கள். அவர்கள் அனைவரும் ஒரே அணியாக மாற வேண்டும். தலைவர் பதவிக்கு வருபவர்களுக்கு சேவை மனப்பான்மை அதிகம் இருக்க வேண்டும். ஆனால் பலதரப்பட்ட போட்டி வரும்போது சேவை மனப்பான்மை இருக்காது. பதவிக்கு வருபவர்கள் தங்களுடைய அடையாளத்தை தொலைத்து விட்டு செயலாற்ற வேண்டும்.தேர்தல் இல்லாமல் வயதில் மூத்த தயாரிப்பாளர்கள் சொல்வதை கேட்டு ஒத்துப்போகும் நபர் தலைமை இடத்திற்கு வர வேண்டும் என்பதே எங்களுடைய விருப்பம் “என்று குறிப்பிட்டார்.

எஸ்.ஏ.சந்திரசேகர் கூறுகையில்  “நாங்கள் பதவிக்கு வரவேண்டுமென்ற எண்ணத்தில் இந்த முடிவை எடுக்கவில்லை. நாகரீகமான முறையில் ஒரு சங்கம் இருக்க வேண்டும் என்பதே நோக்கம். பதவியில் இருந்தாலும் ஒற்றுமை இல்லாததால் தயாரிப்பாளர் சங்கத்தில் எதையும் சாதிக்க முடியவில்லை. நான் தலைவராக இருந்த போதும் இதே நிலைதான் இருந்தது” என்றார். இந்த செய்தியாளர்கள் சந்திப்பில்  தயாரிப்பாளர்கள் கே ராஜன், சுரேஷ் காமாட்சி ஆகியோரும் உடனிருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published.