சென்னை பெரம்பூரில் 28 வருடங்களாக பெருளாதாரத்தில் பின்தங்கிய இளைய சமுதாயத்தினருக்கு இலவசமாக கல்வியோடுக்கூடிய கால்பந்தாட்டாத்தை அளித்து வெற்றிகரமாக இயங்கிவரும் YMSC நல அறக்கட்டளையின் கீழான YMSC கால்பந்தாட்டக் குழுவினால் இளம் வீரர்களின் திறமைகளை ஊக்குவிக்கும் வகையில் 17 வயதுக்குட்பட்டோருக்கான மாநில அளவிலான TRG நினைவு கால்பந்தாட்டப் போட்டி 19-02-2021 முதல் 21-02-2021 வரை 3 நாட்களாக சென்னை பேசின் பாலம் தொன் போஸ்கோ விளையாட்டு மைதானத்தில் நடைப்பெற்றது.

இந்த போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த 16 அணிகள் பல்வேறு மாவட்டங்களிலிருந்து பங்கேற்றார்கள். இந்த போட்டியில் முதல் இடத்தைப் பிடித்த YMSC கால்பந்தாட்டக்குழுவுக்கு விநியோஸ்தகரும், தயாரிப்பாளரும் நடிகருமான திரு R K சுரேஷ் அவர்களும், KRV குருப் ஃஆப் கம்பெனியின் நிர்வாக இயக்குநர் திரு K R வெங்கடேஷ் அவர்களும் மற்றும் YMSC-ன் நிர்வாகி திரு J இளங்கோவன் அவர்களும் பரிசுகளை வழங்கினார்கள்.

தயாரிப்பாளரும் நடிகருமான R K சுரேஷ் கலந்து கொண்ட 17 வயதுக்குட்பட்டோருக்கான மாநில அளவிலான TRG நினைவு கால்பந்தாட்டப் போட்டி

About The Author

Related Posts

Leave a Reply

Your email address will not be published.