தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கான தேர்தல் வரும் ஜூன் 23ஆம் தேதியன்று நடைபெறவுள்ளது. இத்தேர்தலில் நாசர் தலைமையிலான பாண்டவர் அணி மீண்டும் போட்டியிடுகிறது. இவர்களை எதிர்த்து பாக்கியராஜ் தலைமையிலான சுவாமி சங்கரதாஸ் அணி போட்டியிடுகிறது. பாக்கியராஜ் அணியினர் நேற்று (ஜூன் 13) சங்கத்தின் முன்னாள் தலைவரான விஜயகாந்தை விருகம்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து ஆதரவு கோரினர். அவரைத் தொடர்ந்து கமல், ரஜினி, விஜய், அஜித் உள்ளிட்ட நடிகர்களிடமும் ஆதரவு கோரவுள்ளதாக அவர்கள் செய்தியாளர்களிடம் பேசுகையில் தெரிவித்தனர்.

இந்நிலையில், இன்று (ஜூன் 13) பாக்கியராஜ் அணியினர் நடிகர் கமலஹாசனை சென்னை ஆழ்வார்பேட்டையிலுள்ள அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து ஆதரவு கோரினர். இந்த சந்திப்பை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய பாக்கியராஜ், “அந்த அணி இந்த அணி என்பதை விட கட்டடம் கட்டுவதே தனது விருப்பம் என்று கமலஹாசன் கூறினார். தேர்தலை விட நடிகர் சங்க கட்டடத்தின் திறப்பு விழாவிற்கு தனக்கு அழைப்பு விடுக்க வேண்டும் என்று அவர் கூறினார். எங்களது தேர்தல் அறிக்கையை அவரிடம் காண்பித்தோம். அதில் முதல் உறுதிமொழியே அவருக்கு பிடித்திருந்தது” என்று கூறினார்.

Leave a Reply

Your email address will not be published.