முன்னாள் எம்.பி மற்றும் நடிகருமான ஜேகே ரித்தீஷ் மாரடைப்பால் உயிரிழந்தார். கடைசியாக தமிழில் எல்கேஜி என்ற படத்தில் வில்லனாக நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்தவர்.

ராமநாதபுரம் மக்களவை தொகுதி வேட்பாளர் நயினார் நாகேந்திரனை ஆதரித்து கடந்த 2 நாட்களாக தேர்தல் பிரச்சாரத்திற்காக ராமநாதபுரத்தில் தங்கியிருந்தார். இன்று மதிய உணவு சாப்பாடு இடைவேளையில், திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

இவர், 2009 மக்களவைத் தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர். கடந்த 2014 ஆம் ஆண்டு திமுகவில் இருந்து விலகி, அதிமுகவில் இணைந்தார். தற்போது அதிமுகவில் கட்சிப்பணிகளில் ஈடுபட்டு வருகிறார். ‘சின்னப்புள்ள’ என்ற படத்தில் நடிகராக அறிமுகமான இவர், தொடர்ந்து, ‘நாயகன்’, ‘பெண் சிங்கம்’, ‘LKG’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.