உலகம் முழுவதும் அமோக வெற்றி பெற்ற காஞ்சனா இந்தி ரீமேக்கில், ராகவா லாரன்ஸ் வேடத்தில் அக்ஷய் குமார் நடிக்கிறார்.
ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் வெளியான படம் ‘காஞ்சனா’ (‘முனி 2’). ராகவா லாரன்ஸ் ஹீரோவாக நடித்த இந்தப் படத்தில், திருநங்கை கதாபாத்திரத்தில் சரத்குமார் நடித்தார். ஹீரோயினாக ராய் லட்சுமி நடிக்க, கோவை சரளா, தேவதர்ஷினி, ஸ்ரீமன் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்தனர்.
2011-ம் ஆண்டு ஜூலை 22-ம் தேதி இந்தப் படம் ரிலீஸானது. ராகவா லாரன்ஸ் தயாரித்த இந்தப் படத்தை, ஸ்ரீ தேனாண்டாள் ஃபிலிம்ஸ் வெளியிட்டது. காமெடி பேய்ப்படமான இது, சூப்பர் ஹிட்டானது. குறிப்பாக, குழந்தைகளுக்கு இந்தப் படம் மிகவும் பிடித்தது.
சரத்குமார் நடித்த வேடத்தில் நடிக்க பிரபலமான நடிகர்கரிடம் பேச்சுவார்த்தை நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. ராகவா லாரன்ஸ் முதன் முதலாக ஹிந்திப் படத்தை இயக்குவதன் மூலம் பாலிவுட் போகிறார். மேலும் மற்ற நட்சத்திரங்கள் குறித்த விவரம் விரைவில் அறிவிக்கப்படஉள்ளது. ஏப்ரல் மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ளது.
Leave a Reply