‘பழைய வண்ணாரப்பேட்டை, ‘திரௌபதி’ படங்களின் இயக்குனர் அடுத்து ‘ருத்ரதாண்டவம்’ படத்தை இயக்குகிறார். இதில் நாயகனாக திரௌபதி படத்தில் நடித்த ரிச்சர்டு ரிஷி நடிக்கிறார், இப்போது நாயகியாக தர்ஷா குப்தா இணைந்துள்ளார்.

 பிரபல மாடல் அழகியாகவும், பல்வேறு விளம்பர படங்களிலும், விஜய்டிவியில் ஒளிபரப்பாகிவரும் குக் வித் கோமாளியில்  பிஸியாக நடித்து வந்த தர்ஷா குப்தாவிற்கு நாயகி வாய்ப்பு தேடி வந்துள்ளது. சமூகவலைதளங்களில் சுறுசுறுப்பாக இருக்கும் இவர், எப்போதும் கவர்ச்சியான போட்டோக்களை பதிவிட்டு ரசிகர்களை கவர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.

தர்ஷா குப்தா கூறியதாவது

ருத்ரதாண்டவம் படத்தில் ஒப்பந்தமானது முதல், தொடர்ந்து பல கதைகள் வந்த வண்ணம் உள்ளன. திரொபதி பிளாக்பஸ்டர் வெற்றியை கொடுத்த மோகன் ஜியின் அடுத்த ருத்ரதாண்டவம் படத்திற்கு, இப்போதே கோடம்பாக்கத்தில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. மோகன்ஜி படத்தில் நடிப்பது எல்லையில்லா மகிழ்ச்சியை தருகிறது. இந்தப்படமும் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத படமாக இருக்கும், என் சினிமா கேரியரில் முதல் படமே தமிழ்சினிமாவின் கவனிக்கப்பட்ட  படைப்பை கொடுத்த, மோகன் ஜியுடன் என்பதை நினைக்கவே நான் சந்தோஷம் கொள்கிறேன் என்று கூறினார் ஸ்லிம் நயன்தாரா தர்ஷா குப்தா.

Leave a Reply

Your email address will not be published.