வெற்றிமாறன் இயக்கும் அசுரன் படத்தில் நடிகர் தனுஷுக்கு ஜோடியாக மலையாள நடிகை மஞ்சு வாரியர் நடிக்க இருப்பதாக தனுஷ் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

தனுஷ் வெற்றிமாறன் கூட்டணியில் சமீபத்தில் வெளியான ‘வடசென்னை’ படம் சூப்பர் ஹிட்டானதை தொடர்ந்து, பாலாஜி மோகன் இயக்கத்தில் மாரி 2 படத்தைத் தொடர்ந்து நடிகர் தனுஷ் வெற்றிமாறனின் அசுரன் படத்தில் நடிக்கிறார். வி கிரியேஷன்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு இப்படத்தை தயாரிக்கிறார். மேலும் இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தனுஷ் தனது அடுத்த படம் குறித்த அறிவிப்பை டிவிட்டரில் வெளியிட்டார். இயக்குனர் வெற்றிமாறனுடன் மீண்டும் கைகோர்க்க உள்ளதாகவும், இந்த படத்திற்கு அசுரன் என பெயர் வைத்திருப்பதாகவும் தனுஷ் தெரிவித்தார். கலைப்புலி எஸ் தாணு தயாரிக்கும் அசுரன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரையும் தனுஷ் வெளியிட்டார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு ஜனவரி 26ம் தேதி முதல் தொடங்குகிறது. இந்நிலையில் இந்த படத்தில் மலையாள நடிகை நாயகியாக நடிக்க இருக்கிறார். இதுகுறித்து தனுஷ் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

அவர் தனது பதிவில், “எவர்கிரீன் மஞ்சு வாரியர் அசுரன் படத்தின் நாயகியாக நடிக்கிறார். அவருடன் நடிப்பதையும் அவரிடம் இருந்து கற்றுக்கொள்ள இருப்பதையும் நினைக்கும் போது உற்சாகமாக இருக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.