24 Movie Cameraman Thiru Special Interview & Stills

“24” – அதிரவைத்த சூரியா , பிரபல ஒளிப்பதிவாளர் திரு – பேட்ட

  “24”-ல் சூரியா மூன்று வேடங்களுக்கும் ரிஸ்க் எடுத்து நடித்தார் என்பதே உண்மை ஒளிப்பதிவாளர் திரு

நல்ல படத்துக்காக காத்துஇருந்தேன்..  “24” அதை நிறைவேற்றியது.

பி.சி.ஸ்ரீராமின் சீடர்  திருநாவுக்கரசு ( என்ற ) திருவை “மகளிர் மட்டும்” படத்தின் மூலமாக ஒளிப்பதிவாளராக அறிமுகப்படுத்தியவர் உலக நாயகன் கமல்ஹாசன். “ஹேராம்” ,”ஆளவந்தான்” ,”காதலா காதலா” ,என்று வரிசையாக கமல் படங்களுக்கு ஒளிப்பதிவாளராக பணியாற்றினார். பிரியதர்சன் இயக்கிய காஞ்சிவரம் இவரது மற்ற்றொரு அடையாளம் இந்தியில் “கரம் மசாலா” , “பூல்புகல்யா” ,”ஆக்ரோஷ்” , “க்ரிஷ்3“ என்று பத்துக்கும் மேல்மெகா பட்ஜெட் இந்தி படங்களுக்கு ஒளிப்பதிவாளராக பணியாற்றி இந்தியாவின் தலைசிறந்த ஒளிப்பதிவாளராக இருந்து வருகிறார்.  ஆறு வருட இடை வெளிக்கு பின் சூரியாவின் “24”  படம் மூலம் மீண்டும் தமிழுக்கு வந்துள்ளார் .

அவர் சூரியா பற்றி பேசுகையில்……

“சூரியா தவிர வேறு யார் தயாரிப்பாளராக இருந்தாலும் “24” இவ்வளவு சுலபமாக முடிவடைந்து இருக்காது .நல்ல நிலையில் தடையின்றி படப்பிடிப்பு நடத்த படப்பிடிப்பு குழுவுக்கு தேவைப்படுகிறதோ அவை அனைத்தும் ஒரு தயாரிப்பாளர் என்ற முறையில் ஒருங்கிணைத்து அளித்து ஊக்குவித்தார் .

எல்லா ஹீரோக்களுமே தங்களை சினிமாவுக்காக அர்ப்பணித்து கொண்டவர்கள்தான் என்றாலும் சூரியா இன்னும் ஒரு படி மேல் தனது டெடிக்கேசனை ப்ராக்டிக்கலாகவும் செயல்படுத்துவார் வில்லன் “ஆத்ரேயா”. வில்லன் கதாப்பாத்திரத்தை மிகவும் ரிஸ்க் எடுத்து நடித்தார், சூரியா.

இன்று சினிமாவில் தொழில்நுட்பம் மிகவும் வளர்ந்துவிட்டது .இது சினிமாவுக்கு மிகவும்பெரிய சவாலாகவும் உள்ளது..அனால் நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் விதமாக கதைகள் அமைவதில்லை.. ஆனால் அந்த தொழில்நுட்பத்தை நன்கு செயல்படுத்த உதவும் விதமாக அமைந்தது “24” கதைக்களம் .இயக்குநர் விக்ரம் குமாரின் நுணுக்கமான திரைக்கதை சிறப்பு அம்சமாக அமைந்தது  .

ஏன் ஆறு ஆண்டு காலம் தமிழில் படம் செய்யவில்லை என்று கேட்கிறார்கள் .ஹிந்தியில் நான் பணியற்றிகொண்டிருந்ததால் நேரமின்மை ஒரு காரணம் என்றாலும் நல்ல ஒரு படத்துக்காக காத்திருந்தேன் என்பதும் உண்மை.அந்த ஏக்கம் “24”- ல் நிறைவேறியுள்ளது..இதற்கு முன் விக்ரம் குமார் அவர் படங்களுக்கு என்னை அழைத்த போதெல்லாம் அவருடன் பணியாற்ற நேரம் அமையவில்லை,விக்ரம் குமார் என்னிடம் கதை சொல்லும் வேளையில் நான் அவர் கதை சொல்லும் விதத்தை கூர்ந்து கவனித்தேன் .கதை சொல்லி முடிந்தவுடன் நான் பதில் எதுவும் சொல்லாமல் செல் போனில்டயல் செய்து கொண்டிருந்தேன்..அந்த ஒரு நிமிடம் அவர் என்ன இவர் என்னிடம் பதில் எதுவும் சொல்லாமல் போனை கவனித்து கொண்டிருக்கிறாரே என்று அவர் மனம் வருத்தப்பட்டிருக்கலாம்.ஆனால் நான் போன் செய்தது சூர்யாவுக்கு அவரிடம், சார் கதையை கேட்டேன் எனக்கு மிகவும்பிடித்து விட்டது.எனக்கு இந்த படம் செய்ய வேண்டும் என்று விக்ரம் குமார் முன்னிலையில் சொன்னேன்.எனக்கு அவ்வளவு மனநிறைவு அளித்தது. படத்தை இப்போது முழுவதுமாக பார்த்தபோது அந்த மன நிறைவு இரட்டிப்பானது. ஒரு நல்ல படம் ரசிகர்கள் மனதில் நீங்காது இடம் பெறும் புதுமையுடன் புது தொழில் நுட்பயுத்திகள் பயன்படுத்தி எடுத்துள்ளோம் என்ற திருப்தி “24” எனக்கு தந்துள்ளது என்றார்

Leave a Reply

Your email address will not be published.