அவ்னி சினிமேக்ஸ் நிறுவனம் சார்பில் குஷ்பு தயாரிப்பில் சுந்தர்.சி இயக்கத்தில் ஆர்யா, ராஷி கண்ணா, ஆண்ட்ரியா, சாக்ஷி அகர்வால், விவேக், யோகிபாபு ஆகியோர் நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘ ‘அரண்மனை 3’ இத்திரைப்படத்தை .உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் வெளியிடுகிறது.
சிறு வயதிலேயே அரண்மனையில் பேய் இருக்கிறது என்பதை தெரிந்து கொள்கிறார். ராஷி கண்ணா இதனால் ஹாஸ்டலுக்கு செல்லும் ராஷி கண்ணா பல வருடங்கள் கழித்து தனது சொந்த ஊருக்கு வருகிறார். அரண்மனையில் எலக்ட்ரிக்கல் வேலை பார்க்க வரும் ஆர்யா ராஷி கண்ணாவிடம் தனது காதலை சொல்லவேண்டும் என்ற நோக்கத்துடன் வருகிறார்.
ஒரு நாள் இரவு மீண்டும் அரண்மனையில் பேய் இருப்பதை தெரிந்துகொள்கிறார் ராஷி கண்ணா. தன்னை கொலை செய்ய நினைக்கும் பேயிடம் இருந்து தப்பித்து விடுகிறார். ஜமீன்தாரின் உறவுக்காரர் சுந்தர்.சியிடம் இந்த சம்பவத்தை தெரிவிக்கிறார் ராஷி கண்ணா இதை பற்றி விசாரிக்க சுந்தர் சி களத்தில் இறங்குகிறார் அரண்மனையில் இரண்டு பேய்கள் இருப்பதையும் கண்டுபிடிக்கிறார் இறுதியில் அந்த இரண்டு பேய்கள் யார்? எதற்காக ராஷி கண்ணாவை .கொள்ள நினைக்கிறது என்பதே படத்தின் மீதிக்கதை.
நாயகன் ஆர்யா, முற்றிலும் வித்தியாசமான கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருக்கிறார். நாயகி ராஷி கண்ணா, அழகாக வந்து அளவான நடிப்பை கொடுத்து இருக்கிறார். அழகாக இருக்கும் ஆண்ட்ரியா, பேயாக வந்து மிரட்டவும் செய்கிறார். இயக்குனர் சுந்தர் சி வழக்கம் போல் நல்ல நடிப்பை கொடுத்துள்ளா மறைந்த நடிகர் விவேக் தனக்கு கொடுத்த கதாபாத்திரத்தில் கச்சிதமாக நடித்துள்ளார் யோகி பாபுவின் காமெடி வழக்கம்போல் செல்கிறது
இசையமைப்பாளர் சத்யா. பாடல்கள் கேட்கும் ரகம். பின்னணி இசையில் மிரட்டியுள்ளார் யு.கே. செந்திலின் ஒளிப்பதிவு அருமை. தன்னுடைய இரண்டு பாகத்தில் இருந்த கதையை சிறிய மாறுதல்களுடன் வேறு நடிகர்களை வைத்து சுந்தர்சி இயக்கி இருக்கிறார்.
மொத்தத்தில் ‘அரண்மனை 3’ பயமில்லை
Leave a Reply