கண்ணா கணேசன் புரடக்ஷன்ஸ் தயாரிப்பில் எஸ்.ஜி.எழிலன் இயக்கத்தில் தீபா சங்கர், எஸ்.ஜி.எழிலன், டி.திடியன், சு.சின்னதுரை. சகுந்தலா, ராஜா அய்யப்பன், ஜே.சபரிஸ், மணிவாசகன், வீரமணி, வி.ராணிஜெயா ஆகியோர் நடிப்பில் வெளியாகி இருக்கும் “கட்டம் சொல்லுது”.
கணவனை இழந்த தீபா சங்கர் மகளுக்கு குறிப்பிட்ட மாதத்துக்குள் திருமணம் நடக்காவிட்டால் காலத்துக்கும் திருமணம் நடக்காது என்று குறி சொல்லும் கிழவி சொன்னதைக் கேட்டு மகளுக்கு அவசரமாக மாப்பிள்ளை தேடுகிறார் தீபா சங்கர்.
ஜோசியர் ஒருவரை சந்திக்க வரும் தீபா, அங்கு திடியனை சந்திக்கிறார். அவர், தனது நண்பர்கள் நால்வருடன் சேர்ந்து அரட்டை அடித்த கதையை தீபாவிடம் ஒன்று விடாமல் சொல்கிறார். அந்த நால்வரில் யார் தன் மகளுக்கு பொருத்தமான மாப்பிள்ளை என்று காண முயற்சிக்கிறார். அவரால் மாப்பிள்ளையை கண்டு பிடிக்க முடிந்ததா இல்லையா என்பதே படத்தின் மீதிக்கதை.
எஸ் ஜி எழிலன் எழுதி இயக்கி நாயகனாக நடித்து உள்ளார் கதாபாத்திரத்திற்க்கென்று தேர்ந்தெடுக்கப்பட்ட கலைஞர்கள் மிகச் சிறப்பாக எடுத்தமைக்காகவே இயக்குனருக்கு வாழ்த்துகளை தெரிவிக்க வேண்டும். தன்னைப்பற்றி யாரோ தன் தந்தையிடம் போட்டுக்கொடுத்து அடி வாங்கி வைப்பதை எண்ணி நொந்துபோகும் எழிலன், யார் அந்த கோள்மூட்டி என்று கண்டுபிடிக்க முடியாமல் திணறுவது குபீர் சிரிப்பை வரவழைக்கிறது. தீபா சங்கரை மிகவும் அளவோடு வேலை வாங்கியிருக்கிறார் எழிலன் தந்தையாக வரும் போலீஸ்காரர் சின்னத்துரை, தாயாக நடித்திருக்கும் சகுந்தாலாவும் சக பாத்திரங்களாக மாறி வாழ்ந்த்திருக் கின்றனர்.
முழுக்க முழுக்க காரைக்காலில் படமாக்கப்பட்டுள்ள இப்படம், ஒளிப்பதிவாளர் சபரீஸ் அவர்களின் கண் வண்ணத்தில் படமாக்கப்பட்டுள்ளது. இசை அமைப்பாளர் தமீன் அன்சாரி ப்டத்திக்கு பக்க பலம்.
ஜாதகத்தில் இருக்கும் கட்டத்தை நம்பாதே, உன்னையும் உன் உழைப்பையும் நம்பு என்ற ஒற்றை வரியை வைத்து அழகான நேர்த்தியான ஒரு வாழ்வியலை படமாக கொடுத்திருக்கிறார் இயக்குனர் எழிலன்.
மொத்தத்தில் கட்டம் சொல்லுது – காமெடி கலாட்டா
நடிப்பு: தீபா சங்கர், எஸ்.ஜி.எழிலன், டி.திடியன், சு.சின்னதுரை. சகுந்தலா, ராஜா அய்யப்பன், ஜே.சபரிஸ், மணிவாசகன், வீரமணி, வி.ராணிஜெயா
இசை: தமீம் அன்சாரி
ஒளிப்பதிவு:ஜே.சபரிஷ்
தயாரிப்பு: கண்ணா கணேசன்
இயக்கம்:எஸ்.ஜி.எழிலன்
மக்கள் தொடர்பு சதீஷ்
Leave a Reply