திருச்சி மாவட்டம் நவல்பட்டு காவல் நிலையத்தில் பணிபுரியும் சப்-இன்ஸ்பெக்டர் பூமிநாதன், நேற்றிரவு ஆடு திருடர்களை விரட்டிச் சென்று மூகாம்பிகை கல்லூரிக்கு அருகே பிடிக்க முயன்றபோது திருட்டுக் கும்பலைச் சேர்ந்தவர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார் . எப்பொழுதுமே இந்த நாட்டில் குற்றங்கள் ,கொலைக் குற்றங்கள் ,திருட்டு குற்றங்கள் குறைவது அரசின் நோக்கம் மட்டுமல்லாது சாதாரண பொது மக்கள் முதல் காவல் துறை அதிகாரியின் நோக்கமும் கூட .

கிரிமினல்ஸ் திருந்துவது மாதிரி இல்லை .இந்த மாதிரி கிரிமினல்ஸ்ஸை கட்டுபடுத்துவது கஷ்டமாக உள்ளது .உலக அளவில் நம்முடைய காவல் துறை பெயர் பெற்றது .மேலும் இந்த இரண்டு கிரிமினல்களை அடையாளம் கண்டு பிடித்த பிறகு என்கவுண்டர் பண்ண வேண்டும் . நாட்டில் மனித உரிமை மனித உரிமை எனசொல்கிறார்கள் .இது என்னுடைய வேண்டுகோள் மட்டுமல்ல . தமிழ்நாடு அமைதியாக இருக்கணும் .இந்தியா அமைதியாக இருக்கணும் என்று நினைப்பவர்களின் எண்ணமும் கூட .இந்த மாதிரி கிரிமினல்ஸ் இனியும் தொடரக்கூடாது .யூனிபார்ம் போட்ட ஒரு காவல் துறைஅதிகாரியை கொல்கிறார்கள்.அச்சம் என்பது துளி கூட இல்லை .

இரும்புக்கரம் கொண்டு இதை கொண்டு வர வேண்டும் .இது போன்று தொடர்ந்தால் சாதாரண பொது மக்களுக்கு மிகுந்த அச்சத்தில் வாழும் நிலை ஏற்படும் ம்.மக்கள் தைரியமாகவும்,மன உறுதியுடன் வாழ வேண்டுமென்றால் இந்த மாதிரி கிரிமினல்களை என்கவுண்டர் பண்ணுவது மிகவும் அவசியம் .அரசுக்கு என்னுடைய சிறு கோரிக்கை என்னவென்றால் ரௌடிகளை ஒழிக்க சிறப்பு என்கவுண்டர் பிரிவு அரசு ஏற்படுத்த வேண்டும் .கொலை குற்றவாளிகள் திருந்துவார்கள் .

Leave a Reply

Your email address will not be published.