பெரியநாயகி பிலிம்ஸ் தயாரிப்பில் பகவதி பாலா இயக்கத்தில் ராகுல், செல்வா அனிதா, பகவதி பாலா, ஆர்.சுந்தர்ராஜன், நளினி, மீரா கிருஷ்ணன், வையாபுரி, கிங்காங், போண்டாமணி, கொட்டாச்சி, கராத்தே ராஜா,பரோட்டா முருகேஷ், பெஞ்சமின் ஆகியோர் நடிப்பில் வெளியாகி இருக்கும் ஆள் இல்லாத ஊர்ல அண்ணன் தான் எம் எல் ஏ
ஊர் முழுவதும் கடன் வாங்கிவிட்டு அதை திருப்பி தரமுடியாமல் தவிக்கும் நாயகன் ராகுல் வேறு ஊருக்கு செல்கிறார். அங்கு இருக்கும் நண்பன் கொட்டாச்சி உதவியை நாடுகிறார் போட்டோ ஸ்டுடியோ வைத்து நடத்த எண்ணும் இவருக்கு அந்த ஊர் முன்னாள் எம் எல் ஏ மகளிடம் வட்டிக்கு கடன் வாங்குகிறார். அந்த ஏரியாவில், மூன்று முறை தொடர்ந்து எம் எல் ஏ-வாக இருக்கிறார் சுந்தராஜன் . இம்முறை அவர் நிற்காததால், அவருக்கு எதிராக அவரின் சகோதரரான வையாபுரியை நிறுத்த முயற்சி செய்கிறார் வில்லனாக வரும் கராத்தே ராஜா.
எதிரியின் சூழ்ச்சி வலை என தெரியாமல் இருக்கும் வையாபுரி பணத்தை வீணடிக்கிறார் . ஒரு கட்டத்தில் வையாபுரியை தூக்கியெறிந்து, வஞ்சகமாக எம் எல் ஏ-வாகி விடுகிறார் கராத்தே ராஜா. ஒரு கட்டத்தில் மர்ம நபர்களால் கொலை செய்யப்படுகிறார். எம் எல் ஏ. அத்துடன் அந்த பிணமும் காணாமல் போகிறது இறுதியில் எம் எல் ஏ-வை கொலை செய்தது யார்.? எம் எல் ஏ பிணம் கிடைத்ததா? இல்லையா? என்பதே ஆள் இல்லாத ஊர்ல அண்ணன் தான் எம் எல் ஏ படத்தின் மீதிக்கதை.
நாயகன் ராகுல் கதைக்கு ஏற்ற கதாபாத்திரத்தில் கச்சிதமாக பொருந்திருக்கிறார். ஆக்ஷன் காட்சியில் அசத்தி இருக்கிறார்.இன்னும் சற்று கூடுதலான பயிற்சி எடுத்திருக்கலாம் .நாயகி அனிதா கிராமத்து பாங்காக இருக்கிறார். அதே நேரம் யாருக்கும் அடங்காமல் ரெளடி போன்று கெத்தான கதாபாத்திரத்தை சற்றும் சறுக்காமல் கொடுத்திருக்கிறார்
ஆர்.சுந்தராஜன், வையாபுரி அண்ணன் தம்பிகளாக நடித்திருக்கின்றனர். எம் எல் ஏ பதவிக்கு ஆசைப்பட்டு சொத்தை இழக்கும் வையாபுரி ஒரு சிலருக்கு படிப்பினை. போண்டா மணி, பெஞ்சமின், பரோட்டா முருகேஷ், கிங்காங் என பலர் காமெடி களத்தில் பங்கேற்றிருக்கின்றனர். நளினி அனாதை விடுதி காப்பாளராக வந்து செல்கிறார். வில்லனாக வந்த கராத்தே ராஜா தனது வில்லத்தனத்தை நேர்த்தியாக செய்து மிரட்டியிருக்கிறார்.
தேவாவின் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம் .இயக்குனர் பகவதி பாலாவே ஒளிப்பதிவும் செய்திருக்கிறார். காமெடி கதையை அனைவரும் ரசிக்கும்படி கொடுத்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும்.
நடிகர்கள் : ராகுல், செல்வா அனிதா, பகவதி பாலா, ஆர்.சுந்தர்ராஜன், நளினி, மீரா கிருஷ்ணன், வையாபுரி, கிங்காங், போண்டாமணி, கொட்டாச்சி, கராத்தே ராஜா,பரோட்டா முருகேஷ், பெஞ்சமின்
இசை ; தேவா
ஒளிப்பதிவு: பகவதி பாலா
தயாரிப்பு: பெரியநாயகி பிலிம்ஸ்
இயக்கம்: பகவதி பாலா.
மக்கள் தொடர்பு : விஜயமுரளி, சத்யா
Leave a Reply