முயற்சி படைப்பகம் சார்பில் சந்திரசேகர் மாணிக்கம் மற்றும் கார்த்திக் தாஸ் தயாரிப்பில் கார்த்திக் தாஸ் இயக்கத்தில் கார்த்திக் தாஸ் தயாரிக்க, கார்த்திக் தாஸ், சப்னா தாஸ், ஆவிஸ் மனோஜ், கணேஷ் , கிருஷ்ணகுமார் லக்ஷமன், பாலாஜி ராஜசேகர் ஆகியோர் நடிப்பில் வெளியாகி இருக்கும் “வரிசி “
ஐ டி நிறுவனத்தில் வேலை முடிந்து இரவு நேரத்தில் கால் டாக்சியில் வீடு திரும்பும இளம்பெண் ஒருவரை கடத்தி பாலியலுக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்துவிடுகிறான் கால் டாக்சி டிரைவர் அடுத்த சில நாட்களில் போலீஸ்கார் ஒருவருடடைய மகள் கடத்த முயற்சிக்கையில் அந்த பெண் அவனிடம் இருந்து தப்பித்துவிடுகிறாள் . இச்சம்பவத்தை தொடர்ந்து இவ்வழக்கு சிபிஐ அதிகாரி கிருஷ்ணாவிடம் ஒப்படைக்கப்படுகிறது .இது ஒருபுறம் நகர்ந்து செல்ல, நாயகன் கார்த்திக் தாஸ், நாயகி சப்னா, மற்றும் இரண்டு நண்பர்கள் அனுபமா குமாரின் அரவணைப்பில் வளர்கின்றனர்.
கார்த்திக் ,சப்னா இருவரும் காதலிக்கிறார்கள் விரைவில் திருமணம் செய்து கொள்ள நினைக்கையில் நாயகி சப்னா கால் டாக்சி டிரைவரால் கடத்தப்படுகிறார். இறுதியில் நாயகன் நாயகியை மீட்கப்பட்டாரா.? இல்லையா? என்பதே “வரிசி ” படத்தின் மீதிக்கதை.
நாயகன் கார்த்திக் தாஸ் புதுமுக நடிகர் போல் இல்லாமல் அனுபவ நடிகர் போன்ற நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார் வில்லனிடம் ஒரு காட்சியில் அவள் உடம்பை எடுத்துக்கோ அவளை உயிருடன் விட்டுவிடு என்று கேட்கும் காட்சியில் இயக்குனராக மனதில் நிற்கிறார் நடிகர் கார்த்திக் தாஸ்
நாயகி சப்னா தாஸ், பார்ப்பதற்கு அழகாகவும் நடிப்பிலும் குறை சொல்ல முடியாத அளவிற்கு நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். அனுபமா குமார், சிபிஐ அதிகாரியாக வரும் கிருஷ்ணா அவருடைய மனைவி ஆகியோர் சிறப்பாக நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்கள். நண்பனாக வரும் மனோஜ் மற்றும் மனோஜின் காதலியாக வந்த ஜெயஸ்ரீ அவர்களுக்கு கொடுத்த வேலையை சரியாக செய்திருக்கிறார்கள்.
நந்தாவின் இசையில், பாடல்கள் கேட்கும் ரகம். பின்னனி இசையும் நம்மோடு வரும் நிழல் போல், கதையோடு பயணித்தது. மிதுன் மோகனின் ஒளிப்பதிவு படத்திற்கு பலம்
“வரிசி ” என்றால் தூண்டில் என்று பொருள் .படத்தின் முதல் பாதி நட்பு, காதல் எனவும் இரண்டாம் பாதியில் சஸ்பென்ஸ், திரில்லராக எடுத்திருக்கிறார் இயக்குனர். கதாபாத்திரத்தின் தேர்வு, அவர்களின் நடிப்புத் திறமையை வெளிக்கொண்டு வந்த விதம் என இவற்றில் இயக்குனர் வெற்றி பெற்றிருக்கிறார்.

Leave a Reply