ஸ்கை மேஜிக் நிறுவனம் சார்பில் காயத்ரி ரஞ்சித் மற்றும் பாக்யலட்சுமி டாக்கீஸ் நிறுவனம் சாப்ரில் பாக்யலட்சுமி வெங்கடேஷ் ஆகியோர் தயாரிப்பில் ரஞ்சித் ஜோசப். இயக்கத்தில் அரவிந்தன் சிவஞானம் , நர்வினி டெய்சி, லீலாவதி, பிரேம் ஆகியோர் நடிப்பில் ஜனவரி 14 ஆம் தேதி ’ஈழம் பிளை’ (https://eelamplay.com/ta) என்ற ஒடிடி தளத்தில் வெளியாக இருக்கும் “சினம் கொள்”.
பல வருட சிறை தண்டனைக்குப் பிறகு விடுதலையாகும் முன்னாள் போராளியான அரவிந்தன் சிவஞானம், தனது மனைவியை தேடி அலைகிறார். அவரது வீடு அமையப்பெற்ற வட்டப்பிலை பகுதிகளில் எல்லாம் சிங்கள ராணுவத்தின் கட்டுப்பாட்டுக்குள் இருக்க அங்கே நுழைய முடியாத நிலையில் சிறைக்குப் போனபோது ஆதரவின்றி விடப்பட்ட தன் மனைவியைத் தேடி அலைந்து கொண்டிருக்கிறார்.அவருடைய போராளி நண்பர்கள் சிலர் ஆதரவு அளிக்கிறார்கள். அவர்களின் உதவியோடு தனது மனைவி மற்றும் மகளை கண்டுபிடிக்கும் அரவிந்தன், அவர்களோடு சந்தோஷமாக வாழும் நிலையில், எதிர்பாராத சதியில் மாட்டிக் கொள்ளும் நாயகன் அதில் இருந்து மீண்டாரா? இல்லையா ? என்பதே “சினம் கொள்”. படத்தின் மீதிக்கதை.
நாயகன் அரவிந்தன் அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார். தனக்கு எதிரே இருக்கும் அத்தனை பிரச்சினைகளையும் மிக சாதுரியமாக எதிர்கொண்டு அதில் இருந்து அவர் வெளியே வருவது மிகுந்த மன நிறைவைத் தருகிறது. கடைசியில் எதிர்பாராமல் நிகழும் அமுதனின் முடிவும் படத்தில் ஒட்டாமல் தொக்கி நிற்பது ஒரு குறை.
அரவிந்தனின் மனைவியாக நடித்திருக்கும் நர்வினி டெரி, கதாப்பாத்திரத்திற்கு பொருத்தமான தேர்வாக இருப்பதோடு, கணவனை இழந்து தவிக்கும் ஈழ பெண்களின் அவல குரலாக ஒலிக்கிறார்.
என்.ஆர்.ரகுநந்தன் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்டு ரகம்,எம்.ஆர்.பழனிகுமாரின் ஒளிப்பதிவு படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது.
இலங்கைவாழ் தமிழர்களுடைய வாழ்வாதாரத்தையும் இயல்பு வாழ்க்கையும் மிக அழகாகவும் நேர்த்தியாகவும் நம் கண் முன்னே காண்பித்திருக்கிறார் இயக்குனர் ரஞ்சித் ஜோசப்
Leave a Reply