ட்ரைடன் ஆர்ட்ஸ் ரவீந்திரன் தயாரிப்பில் ஹரிஹரன் இயக்கத்தில் அஸ்வின் குமார்,அவந்திகா மிஸ்ரா,தேஜு அஸ்வினி, புகழ் ஆகியோர் நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘என்ன சொல்ல போகிறாய்’
நாயகன் அஷ்வின் சென்னையில் உள்ள ஒரு FM ஸ்டேஷனில் Rjவாக பணியாற்றி வருகிறார். எழுத்தாளராக இருக்கும் அவந்திகாவை திருமணம் செய்து வைக்க அஸ்வினின் தந்தை முடிவு செய்கிறார். எழுத்தாளராக இருக்கும் அவந்திகா தனக்கு வரப்போகும் கணவருக்கு முன்னாள் காதல் கதை இருக்கவேண்டும் என எதிர்பார்க்கிறார். ஆனால் அஷ்வினுக்கு அப்படி ஏதும் கிடையாது என்பதால் இதற்காக தேஜு அஸ்வினியை தனது முன்னாள் காதலியாக அறிமுகம் செய்து வைக்கிறார். ஒரு கட்டத்தில் தேஜு அஸ்வினி மீது காதல் வயப்படுகிறார் அஸ்வின்
இறுதியில், நாயகன் அஸ்வின் அவந்திகாவை திருமணம் செய்தாரா? இல்லையா ? என்பதே ‘என்ன சொல்ல போகிறாய்’ படத்தின் மீதிக்கதை.
நாயகன் அஸ்வின் குமார், தன்னால் முடிந்த வரை நன்றாக நடித்திருக்கிறார். நாயகிகளாக வரும் தேஜு அஸ்வினி மற்றும் அவந்திகா மிஸ்ரா ஆகியோர் அழகாக வந்து கொடுத்த வேலையை சரியாக செய்திருக்கிறார்கள். புகழின் காமெடி பெரியதாக எடுபடவில்லை .
விவேக் – மெர்வின் பின்னணி இசையும், பாடல்களும் படத்திற்கு கொஞ்சம் பலம் சேர்க்கிறது ரிச்சர்ட் நாதனின் ஒளிப்பதிவு காட்சிகளையும், கதாப்பாத்திரங்களையும் கலர்புல்லாக காட்டியிருக்கிறது.
முக்கோண காதல் கதையை புதிய கோணத்தில் சொல்ல முயற்சித்திருக்கும் இயக்குநர் ஹரிஹரன் முதல் பாதி கவர்ந்த அளவிற்கு இரண்டாம் பாதி பெரியதாக கவரவில்லை.
மொத்தத்தில், ‘என்ன சொல்ல போகிறாய்’ எது உண்மையான காதல்
நடிகர்கள் : அஸ்வின் குமார்,அவந்திகா மிஸ்ரா,தேஜு அஸ்வினி, புகழ்
இசை விவேக் – மெர்வின்
இயக்குனர் ஹரிஹரன்
மக்கள் தொடர்பு : சுரேஷ் சந்திரா
Leave a Reply