சூப்பர் டாக்கீஸ் சார்பில் சமீர் பாரத் ராம் தயாரிப்பில் தர்புகா சிவா இயக்கத்தில் அமிர்தா மாண்டரின், பூர்வா ரகுநாத், கே.ஹரிஷ், சரண் குமார், ராகுல் கண்ணன், நரேன் விஜய், மஞ்சுநாத் நாகராஜன் ஆகியோர் நடிப்பில் வெளியாகி இருக்கும் “முதல் நீ முடிவும் நீ” ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகி இருக்கிறது.
11 ஆம் வகுப்பு பள்ளி வாழ்க்கையில் தொடங்குகிறது பள்ளி சேட்டைகள், காதல், கொண்டாட்டம், ஜாலியாக பள்ளி வாழ்க்கை செல்கிறது. அனு, கேத்ரின், சைனீஸ், வினோத், துரை, பிரான்சிஸ், ரேகா, ரிச்சர்ட், உள்ளிட்ட சிலர் ஒரே பள்ளியில் படிக்கும் நண்பர்கள். இதில் கிஷன் தாஸ், அமிர்தா மாண்டரின் இருவரும் காதலர்கள். அமைதியாக செல்லும் இவர்களது காதல் வாழ்க்கையில் மற்றொரு பெண் வருவதால் மோதல் ஏற்படுகிறது . . இருவரும் பிரிகிறார்கள். சற்று அனுசரித்து ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளாததால் அவர்களின் வாழ்க்கை எங்கே போய் நிற்கிறது என்பதே நீ முடிவும் நீ’ படத்தின் மீதிக்கதை.
முதன்மை கதாப்பாத்திரமாக நடித்திருக்கும் கிஷன் தாஸ் மற்றும் மீதா ரகுநாத் ஜோடி ரசிக்க வைக்கிறார்கள். விநோத், அனு, கேத்தரின், சைனீஸ், ரிச்சர்ட் இவர்கள் எல்லோரும் இக்கதையில் பதினொன்றாம் வகுப்பு மாணவர்கள். ஒரே பள்ளியில் படிக்கும் இவர்களது பள்ளிநாள்கள் நமக்கு திரைவிருந்தாக கிடைக்கிறது.
90களில் மாணவ-மாணவிகளுக்கு பள்ளி வாழ்க்கையில் நிகழ்ந்த சுவாரஸ்யமான சம்பவங்களோடு படம் நகர்கிறது. நாயகன் கிஷன் தாஸ் நண்பர்களோடு அரட்டை அடிப்பது, காதல் என கதாபாத்திரத்திற்கு தேவையானதை செய்து கொடுத்துள்ளார்.
பால்யகாலத்தில் நடந்த சின்ன காதல் முறிவு., ஒரே ஒரு வார்த்தையில் முடிந்து போயிருக்க வேண்டிய விசயம் அது. அம்முறிவு எப்படி பெரிய மன பாரத்தை அவர்களது மனதில் ஏற்றி விடுகிறது எனக் காட்டியிருக்கிறார்கள்.
சுஜித் சரங்கின் ஒளிப்பதிவு படத்திற்கு பலம். தர்புகா சிவாவின் பாடல்கள் ரசிக்கும் ரகம் என்றாலும், பின்னனி இசை கதையோடு பயணிக்க வைக்கிறது.
கிடாரி, பலே வெள்ளையத்தேவா, எனை நோக்கி பாயும் தோட்டா படங்களுக்கு இசையமைத்த தர்புகா சிவா இப்படத்தை எழுதி இயக்கியுள்ளார். முதல் பாதி எதார்த்தமாக செல்கிறது. இரண்டாம்பாதி சற்று மந்தமாக செல்கிறது. ஒரு சில காட்சியில் இயக்குனர் சற்று கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம். பள்ளியில் நாம் படிக்கும் போது பார்த்த, ரசித்த, பல விஷயங்களை இயக்குநர் நினைப்படுத்தியிருக்கிறார்.
Leave a Reply