பிரண்ட்ஸ் பிக்சர்ஸ் சார்பில் N.P இஸ்மாயில் தயாரிப்பில் K.R. ஸ்ரீஜித் இயக்கத்தில் ஹனீபா, ரா.ராமமூர்த்தி, மகாலெட்சுமி, ஜோமோல்,கே.பி.அனில், அஸ்வதி, ரவீந்திரன் ஆகியோர் நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘கொன்றுவிடவா “
ஒரு பெண்ணை மூன்று பேர் கற்பழித்து கொலை செய்ய அந்த பெண் பேயாக வந்து பலி வாங்குவதுதான் படத்தின் கதை.
கொடைக்கானலில் கூலித் தொழிலாளி ரவீந்திரன் (கருப்பசாமி) இவருக்கு இரண்டு மகள்கள் மூத்தமகள் ஜோமோல் (மணிமேகலை ) இளையமகன் மகாலெட்சுமி (தாமரை) எதிர்பாரா விதமாக மூத்த பெண் கற்பழித்து கொலை செய்யப்படுகிறார். இவருடைய இளையமகளுக்கு கை கால் செயல் இழந்துவிட மருத்துவ உதவிக்காக அந்த ஊரில் இருக்கும் ரா.ராமமூர்த்தி (முத்து), ஹனீபா (மணி), கே.பி.அனில் (நாகராஜ்) ஆகியோர் பண உதவி செய்கிறார்கள் .
இதே நேரத்தில் அந்த ஊரில் பெண்கள் பின்னால் சுற்றும் ஒருவரை பெண் ஆவி கொலை செய்கிறது. இதையடுத்து கருப்பசாமி, முத்து, மணி, நாகராஜ் கொலை செய்ய முயற்சிக்கிறது. இறுதியில் பெண் ஆவி யார்? எதற்க்காக பழிவாங்க நினைக்கிறது என்பதே “கொன்றுவிடவா” படத்தின் மீதிக்கதை.
தாமரை என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் மகாலெட்சுமி முதல்படம் என்று சொல்ல முடியாத அளவிற்கு அற்புதமாக நடித்திருக்கிறார். முதல் பாதியில் சக்கர நாற்காலியில் மைதியாக வருபவர் படத்தின் இரண்டாம் பாதியில் ஆவியுடன் சேர்ந்து எதிரிகளை பந்தாடுகிறார்.
மணிமேகலை என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஜோமோல் படம் முழுவதும் கருப்பு நிற சேலையில் வந்து தன்னை கொன்றவர்களுக்கு உதவியவரை வைத்து பழிவாங்குவது சிறப்பு
காமக்கொடூரர்களாக நடித்திருக்கும் ஹனீபா (மணி), ரா.ராமமூர்த்தி (முத்து), கே.பி.அனில் (நாகராஜ்) அவரவருக்கு கொடுத்த வேலையை திறம்பட செய்திருக்கிறார்கள். அப்பா கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ரவீந்திரன் இயல்பாக நடித்திருக்கிறார்
அபிஜித் K.M ஒளிப்பதிவு மலைப்பகுதியை மிகவும் அழகாக படமாக்கியுள்ளார். பிலால் கீஸ் பின்னணி இசை படத்திற்கு பலம் சேர்க்கிறது.
இயக்குனர் K.R. ஸ்ரீஜித் பெண்கள் எந்த விதத்தில் பாதிக்கப்படுகிறார்கள் என்பதை சமூக அக்கறையுடன் சொல்லி இருக்கிறார். படம் ஆரம்பம் முதல் முடியும் வரை கதையை விறுவிறுப்பாக கொண்டு செல்கிறார். படத்தில் பாடல்கள் இல்லாதது சிறப்பு.
மொத்தத்தில் “கொன்றுவிடவா” பலி வாக்கும் ஆவி
நடிகர்கள்
ஹனீபா (மணி)
ரா.ராமமூர்த்தி (முத்து)
மகாலெட்சுமி (தாமரை)
ஜோமோல் (மணிமேகலை )
கே.பி.அனில் (நாகராஜ்)
அஸ்வதி (திவ்யா)
ரவீந்திரன் (கருப்பசாமி)
பின்னணி இசை – பிலால் கீஸ்
ஒளிப்பதிவு-அபிஜித் K.M
கதை திரைக்கதை இயக்கம். K.R. ஸ்ரீஜித்
மக்கள் தொடர்பு : வெங்கட்
Leave a Reply