வெங்கட் ரெட்டி தயாரிப்பில் சந்தீப் சாய் இயக்கத்தில் வெங்கட் ரெட்டி, உபசன்னா ஆர்.சி., சி.என்.பாலா ஆகியோர் நடிப்பில் வெளியாகி இருக்கும் ’யாரோ’
ஒரு சைக்கோ கொலைகாரன், தனியாக பங்களாவில் இருக்கும் முதியவர்களை கொன்று அந்த பங்களாவை தன்னுடையதாக ஆக்கிக் கொள்கிறான். இதுதான் கதை. ’யாரோ’
சென்னையில் கட்டிட வடிவமைப்பாளர் இருக்கும் வெங்கட் ரெட்டி தனியாக பங்களாவில் வசிக்கிறார். அடிக்கடி அவருக்கு மோட்டார் சைக்கிளில் செல்லும்போது யாரோ விபத்தில் சிக்கும் சம்பவம் கனவில் வருகிறது. இதுகுறித்து டாக்டரை சந்தித்து ஆலோசனை பெறுகிறார்.
அடிக்கடி பயங்கரமான கனவுகள் காண்பவர், தன் வீட்டில் யாரோ இருப்பது போல உணர்கிறார். ஆனால், அவரது நண்பர்கள் அப்படி யாரும் இல்லை, என்று அவருக்கு தெளிவுப்படுத்துகிறார்கள். இந்த நிலையில், தன் வீட்டில் கேமரா ஒன்றை கண்டெடுக்கும் வெங்கட் ரெட்டி, அதில் முதியவர் ஒருவரை மர்ம நபர் கொலை செய்யும் வீடியோ காட்சி இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைகிறார். இறுதியில் அந்த வீடியோவில் கொலை செய்த நபர் யார்.? என்பதே ’யாரோ’ படத்தின் மீதிக்கதை.
நாயகனாக நடித்திருக்கும் வெங்கட் தமிழ் சினிமாவிற்கு அறிமுகம். ஒட்டுமொத்த கதையிலும் இவர் மட்டுமே பயணிக்கும் படியாக கதை நகர்கிறது. தயாரித்து கதாநாயகனாகவும் நடித்திருக்கிறார் என்றுதான் கூற வேண்டும். நாயகியாக நடித்திருக்கும் உபாசனா, பேருக்கு தான் நாயகியே தவிர படத்தில் அதற்கான எந்த வேலையும் அவருக்கு கொடுக்கப்படவில்லை.
கே.பி.பிரபுவின் ஒளிப்பதிவும், ப்ராங்ளினின் இசையும் படத்திற்கு பலம் சேர்க்கிறது. சைக்கோ த்ரில்லர் ஜானர் கதையை வித்தியாசமாக சொல்ல முயற்சித்திருக்கிறார் இயக்குநர் சந்தீப் சாய், புது முக நடிகர்களின் பங்களிப்பு உண்மையிலேயே பாராட்டுக்குரிய ஒன்று. ஆனால், அதனை இயக்குநர் இன்னும் சற்று மெருகேற்றி இருக்கலாம்.
ஒரு நல்ல சைக்கோ த்ரில்லராக உருவாக்கியிருக்கூடிய படத்தை நிறைய சொதப்பல் காட்சிகளுடன் ரொம்ப சாதாரணமாக உருவாக்கியிருக்கிறார்கள்.
மொத்தத்தில் ’யாரோ’ யார் அந்த கொலையாளி
நடிகர்கள் : வெங்கட் ரெட்டி, உபசன்னா ஆர்.சி., சி.என்.பாலா
இசை:ஜோஸ் ப்ராங்க்ளின்
இயக்கம்: சந்தீப் சாய்
மக்கள் தொடர்பு : சதீஷ் (AIM)
Leave a Reply