பிக் பிரின்ட் பிக்சர்ஸ் சார்பில் கார்த்திகேயன் தயாரிப்பில், பிரித்வி ஆதித்யா இயக்கத்தில் ஆதி, அகன்ஷா சிங், கிரிஷா குருப், நாசர் , பிரகாஷ் ராஜ், மைம் கோபி, முனிஷ்காந்த் ஆகியோர் நடிப்பில் நேரடியாக சோனி லைவ் ஓடிடி தளத்தில் .வெளியாகி இருக்கும் ‘கிளாப்’
தடகள ஒட்டப் பந்தய வீரரான ஆதி விபத்தில் தனது ஒரு காலையும் இவருடைய தந்தை பிரகாஷ் ராஜையும் இழக்கிறார். இதனால் தேசிய தடகள போட்டியில் பங்கேற்க முடியாமல் மன உளைச்சலில் இருக்கிறார். இதனால் தனது காதல் மனைவி அகன்ஷா சிங் உடன் இயல்பாக வாழ முடியாமல் தவிக்கிறான் . இதனிடையே மதுரையில் இருக்கும் கிராமத்து பெண் கிரிஷா குரூப் உள்ளூர் ஓட்டப்பந்தய போட்டியில் குறைந்த நேரத்தில் ஓடி சாதனை படைத்திருக்கிறார்.
அந்த பெண்ணுக்கு சரியான பயிற்சி அளித்து தேசிய அளவில் ஓட்டப்பந்தயத்தில் சாதனை படைக்க வைக்க நினைக்கிறார் ஆதி அந்த பெண்ணுக்கு பயிற்சி அளிக்க ஒரு பயிற்சியாளர் கூட முன் வரவில்லை. அதற்கு காரணம் உயர் அதிகாரி நாசரின் செயல்தான் என்பது ஆதிக்கு தெரிகிறது. அவரை நேருக்கு நேராக சந்தித்து நியாயம் கேட்கிறார்.இதையடுத்து தனி ஆளாக நிற்கும் ஆதி, கிரிஷாவுக்கு பயிற்சி அளிக்கிறார். இறுதியில் அந்த பெண் ஜெயித்தாரா? இல்லையா? என்பதே ‘கிளாப்’ படத்தின் மீதிக்கதை..
கதிர் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஆதி சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். நாயகி ஆகாங்ஷா சிங் அழகாக வந்து அளவான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார் கிரிஷா குரூப் சிறப்பாக நடித்துள்ளார் . நாசர் தனது அனுப்ப நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.ஆதியின் தந்தையாக வரும் பிரகாஷ் ராஜ் படத்தின் குறைத்த காட்சிகளே இருந்தாலும் அதை நிறைவாக செய்திருக்கிறார்.
பிரவீன் குமாரின் ஒளிப்பதிவு இளையராஜாவின் பின்னணி இசை படத்திற்கு பலம் சேர்க்கிறது. இயக்குனர் பிரித்வி ஆதித்யா ஆரம்பம் முதல் இறுதிவரை படத்தின் படத்தின் ஆர்வம் குறைந்து விடாத வகையில் இயக்கி இருக்கிறார். வாழ்த்துக்கள்.
மொத்தத்தில் ‘கிளாப்’ வெற்றியை நோக்கி ஓட்டம்
நடிகர்கள் : ஆதி, ஆகான்ஷா சிங், நாசர். கிரிஷா குரூ, பிரகாஷ்ராஜ், முண்டாசுபட்டி ராமதாஸ், மைம் கோபி,
இசை: இளையராஜா
இயக்கம்: பிரித்வி ஆதித்யா
மக்கள் தொடர்பு : சுரேஷ் சந்திரா
Leave a Reply