துவாரகா ஸ்டுடியோஸ் தயாரிப்பில் தினேஷ் பழனிவேல் இயக்கத்தில் வெங்கடேஷ் , சந்தோஷ் பிரதாப், ரஜினி சாண்டி, பவ்யா த்ரிகா ஆகியோர் நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘கதிர்’
என்ஜினியரிங் படித்திருக்கும் கதிர் (வெங்கடேஷ்) வேலை தேடி சென்னை வருகிறான். தன் நண்பன் வாடகைக்கு தங்கியிருக்கும் அறையில் தங்கி வேலை தேடுகிறான். வீட்டு உரிமையாளர் பாட்டிக்கு கதிரின் சேட்டைகள் பிடிக்காததால் திட்டி விரட்டுகிறார். ஒரு கட்டத்தில் பாட்டி வீட்டில் மயக்கம் போட்டு விழ அவரை மருத்துவ மனையில் சேர்க்கிறான் கதிர். அன்று முதல் கதிர் மீது பாட்டிக்கு பாசம் ஏற்படுகிறது. கதிருக்கு வேலையும் கிடைக்கிறது.
அலுவலகத்தில் சேர செல்லும்போது அங்கு தனது பழைய காதலியை பார்க்கும் கதிர் அந்த வேலைக்கு செல்லாமல் திரும்புகிறார். பாட்டியிடம் தனது காதல் தோல்வியை சொல்லி முடிக்கிறான். அவனைத் தேற்றும் அந்த பாட்டி தனது வாழ்வின் அதிர்ச்சிகளைச் சொல்கிறார் . இறுதியில் பாட்டியின் வாழ்க்கை கதையை கேட்டு உத்வேகம் அடையும் கதிர் பிறகு என்ன செய்கிறார் என்பதே ‘கதிர்’படத்தின் மீதிக்கதை.
நாயகனாக நடித்திருக்கும் வெங்கடேஷ் தொடக்கம் முதல் இறுதி வரை மிக சிறப்பாக நடித்திருக்கிறார்.கல்லூரி மாணவராக காதல் வயப்படுவது, நண்பர்களுக்காக ஆக்ரோஷமாக சண்டைப்போடுவது என்று துடிப்பாக நடித்திருப்பவர், நாயகியாக நடித்திருக்கும் புதுமுக நடிகை பாவ்யா ட்ரிகா தன்னுடைய அழகிலும் நடிப்பிலும் அசத்தியுள்ளார்.
கம்யூனிச போராளியாக படத்தின் இரண்டாவது பாதிக்கு மேல் சிறப்பு காட்சியில் தோன்றும் நடிகர் சந்தோஷ் பிரதாப், ஒரு புரட்சியாளனாக தன்னுடைய நடிப்பில் அசத்தியுள்ளார்.
ரஜினி சாண்டி பாட்டி கதாபாத்திரத்தில் நம்மை அறியாமல் ரசிக்க வைக்கிறார். நம்மளுக்கு இப்படி ஒரு வீட்டு உரிமையாளர் இல்லையே என்ற ஏக்கம் வரும் அளவிற்க்கு நடித்து இருக்கிறார் வெங்கடேஷ் நண்பர்கள் கேரக்டரில் வரும் அனைவருமே நல்ல நடிப்பையே கொடுத்துள்ளனர்.
பிரஷாந்த் பிள்ளையின் இசையும், ஜெயந்த் சேது மாதவனின் ஒளிப்பதிவும் கதைக்கு ஏற்ப பயணித்துள்ளது.
உயிர் நண்பன் மறைவுக்கு பிறகு கதாநாயகன் நண்பர்களோடு கிராம விவசாயிகளுக்கு கைகொடுக்கும் தொழிலைத் தேர்ந்தெடுத்து, தடைகளை உடைத்து போராடும் காட்சிகளை இயக்கியிருக்கும் தினேஷ் பழனிவேல் அனைவரின் பாராட்டுப் பெறுகிறார் .
மொத்தத்தில் ‘கதிர்’ இளைஞர்களுக்கான பாடம்
நடிப்பு: வெங்கடேஷ், சந்தோஷ் பிரதாப், ரஜினி சாண்டி, பாவ்யா ட்ரிகா
இசை: பிரசாந்த் பிள்ளை
இயக்கம்: தினேஷ் பழனிவேல்
மக்கள் தொடர்பு : : சதீஷ் (AIM)
Leave a Reply