RK செல்லுலாய்ட்ஸ் & கல்லால் க்ளோபல் என்டர்டைன்மென்ட் தயாரிப்பில் சபரி – சரவணன் இயக்கத்தில் கே.எஸ்.ரவிகுமார், தர்ஷன், லாஸ்லியா, யோகி பாபு,மனோபாலா ஆகியோர் நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘கூகுள் குட்டப்பா’
கோயம்புத்தூர் அருகே உள்ள ஒரு கிராமத்தில் வாழந்து வருபவர் கேஎஸ் ரவிக்குமார் இவருடைய மகன் தர்ஷன் ரோபோடிக் என்ஜினியரிங் படித்து முடித்து விட்டு வெளிநாடு செல்ல ஆசைப்படுகிறார். அதற்கு கேஎஸ் ரவிக்குமார் மறுப்பு தெரிவிக்கிறார். ஒருவழியாக தந்தையை சமாதானப்படுத்தி ஜெர்மன் செல்கிறார் தர்ஷன்.
வீட்டில் தனிமையில் இருக்கும் தந்தையை கவனித்துக் கொள்ள தனது நிறுவனத்தால் பரிசோதனையில் இருக்கும் ஒரு ரோபோவை அவருக்கு துணையாக தருகிறார். முதலில் அதை ஏற்க மறுக்கும் கேஎஸ் ரவிக்குமார் அது செய்யும் பணிவிடைகளை பார்த்து ஏற்றுக்கொள்கிறார். தனது இன்னொரு மகன் போல் அதன் மீது பாசம் காட்டுகிறார் இதே போன்ற இன்னொரு ரோபோ, வேறொரு நபரை தாக்கி கொன்று விடுகிறது. இதை அறிந்த தர்சன், தந்தையை காப்பாற்ற இந்தியா வருகிறார். ஆனால் ரவிக்குமார் ரோபோவை அனுப்ப மறுக்கிறார். இறுதியில் தர்ஷன் ரோபோவிடம் இருந்து தந்தையை காப்பாற்றினா? இல்லையா? என்பதே ‘கூகுள் குட்டப்பா’படத்தின் மீதிக்கதை.
முதியவர் கதாபாத்திரத்தில் கே.எஸ்.ரவிக்குமார் கச்சிதமாக பொருந்துகிறார். ரோபோவை தனது மகனாகவே நினைத்து பாசம் காட்டுவது, அதை தனது மகன் பிரிக்க நினைக்கிறான் என்றவுடன் குமுறுவது என்று இயல்பாக நடித்திருக்கிறார்.கேஎஸ் ரவிக்குமாரை சுற்றித்தான் முழு படம் நகர்கிறது. மகனாக நடித்திருக்கும் தர்ஷன் தன்னால் முடிந்தளவிற்கு நடிக்க முயற்சி செய்திருக்கிறார்.
நாயகியாக நடித்திருக்கும் லாஸ்லியா அழகாக வந்து செல்கிறார்.யோகிபாபுவின் காமெடிகளும் ஓரளவுக்கு ரசிக்க வைக்கிறது.ரவிக்குமாரின் காதலியாக நடிப்பவர் அழகாகவும் இருக்கிறார் இயல்பாகவும் நடிக்கிறார்.
ஜிப்ரானின் இசை படத்திற்கு ஓரளவு பலம் சேர்த்திருக்கிறது. அர்வியின் ஒளிப்பதிவு படத்திற்கு வலுசேர்க்கிறது.
மலையாளத்தில் ரதீஷ் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற ‘ஆண்ட்ராய்டு குஞ்சப்பன்’ திரைப்படத்தை தமிழில் கூகுள் குட்டப்பா என்ற பெயரில் தயாரித்து நடித்திருக்கிறார் கேஎஸ் ரவிக்குமார். இவருடன் ரோபோ காம்பினேஷன் காட்சிகள் படத்திற்கு ஆறுதலாக உள்ளது. இவரிடம் உதவி இயக்குனர்களாக இருந்த சபரி மற்றும் சரவணன் ஆகியோர் இணைந்து இயக்கியுள்ளனர்.
மொத்தத்தில் ‘கூகுள் குட்டப்பா’ ரோபோ மீது பாசம்
நடிகர்கள் : கே.எஸ்.ரவிகுமார், தர்ஷன், லாஸ்லியா, பவித்ரா மேனன், மாரிமுத்து, யோகி பாபு, மனோபாலா, சி.ரங்கநாதன், பிராங்க் ஸ்டார் ராகுல், பூவையார், சுஷ்மிதா
இசை: ஜிப்ரான்
இயக்கம்: சபரி – சரவணன்
மக்கள் தொடர்பு : யுவராஜ்
Leave a Reply