காமன் மேன் சார்பில் பி.கணேஷ் தயாரிப்பில் ரவி அரசு இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ், மகிமா நம்பியார், ஆடுகளம் நரேன், காளி வெங்ஜட், அருள்தாஸ், ஹரிஸ் பெராடே, அழகம் பெருமாள், சரவண சுப்பையா ஆகியோர் நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘ஐங்கரன்’
புதிய அறிவியல் கண்டுபிடிப்புகளை கொண்டு சாதிக்க துடிக்கும் இளைஞர் ஜிவி பிரகாஷ் சென்னை, மதுரை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் உள்ள நகைக்கடைகளில் கொள்ளையடித்து விட்டு வெளிமாநிலம் தப்பிச் செல்ல முயற்சிக்கிறது வடமாநில கொள்ளையர் கும்பல் ஒன்று. எதிர்பாராதவிதமாக அவர்கள் கொள்ளையடித்த நகை மூட்டை நாமக்கலில் உள்ள ஒரு ஆழ்துளை கிணற்றில் விழுந்துவிடுகிறது. அதனை எடுப்பதற்காக ஒரு குழந்தையை கடத்தி அந்த ஆழ்துளை கிணற்றில் போட்டுவிடுகிறது
மறுபுறம் என்ஜினியரிங் பட்டதாரியான நாயகன் ஜி.வி.பிரகாஷ் குழந்தையைக் கிணற்றில் இருந்து மீட்க புதிய இயந்திரம் ஒன்றை கண்டுபிடிக்கிறார். ஆழ்துளை கிணற்றில் போடப்பட்ட குழந்தையை மீட்க முயற்சி செய்கிறார். இறுதியில் ஆழ்துளை கிணற்றில் இருந்து குழந்தையை உயிருடன் மீட்டாரா? இல்லையா? என்பதே ‘ஐங்கரன்’படத்தின் மீதிக்கதை.
நாயகன் ஜிவி பிரகாஷ் துடிப்பான சாதிக்க துடிக்கும் இளைங்கனாக அசத்தியுள்ளார். சண்டைக் காட்சிகளில் ஒரு படி மேலே போயிருக்கிறார். ஜி.வி.பிரகாஷ் நடித்த முந்தைய படங்களைக் காட்டிலும் ஐங்கரன் குறிப்பிடத்தக்க படமாக விளங்கும். நாயகி மஹிமாவுக்கு பெரிய வேலை இல்லை. வில்லனாக நடித்திருக்கும் சித்தார்த் சங்கர் மிரட்டலான நடிப்பை கொடுத்துள்ளார்.காளிவெங்கட், ஹரீஷ் பெராடி, ஆடுகளம் நரேன் உள்ளிட்ட மற்ற நடிகர்கள் தங்கள் பாத்திரங்களை நிறைவாக செய்திருக்கிறார்கள்.
ஜி.வி.யின் இசையில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை படத்திற்கு பலம் சேர்க்கிறது. சரவணன் அபிமன்யுவின் ஒளிப்பதிவு அபாரம்
படத்தின் மிகப்பெரிய பலம் இயக்குனர் ரவி அரசுவின் திரைக்கதை. சமூக அக்கறையுடன் கூடிய ஒரு கருத்தை கமர்ஷியல் பாணியில் மிக அற்புதமாக கொடுத்திருக்கிறார். திரைக்கதையில் எதையும் வலிந்து திணிக்காமல், திருப்பங்கள் மிக இயல்பாக ஏற்படுவது படத்திற்கு பெரிய ப்ளஸ்
மொத்தத்தில் ‘ஐங்கரன்’சமூக நலன்
நடிகர்கள் :ஜி.வி.பிரகாஷ், மகிமா நம்பியார், ஆடுகளம் நரேன், காளி வெங்ஜட், அருள்தாஸ், ஹரிஸ் பெராடே, அழகம் பெருமாள், சரவண சுப்பையா மற்றும் பலர்
தயாரிப்பு: பி.கணேஷ்
இசை: ஜி.வி.பிரகாஷ்
இயக்கம்: ரவி அரசு
மக்கள் தொடர்பு : கோபி
Leave a Reply