ஷிவானி ஸ்டுடியோஸ் சார்பில் சுபா செந்தில் தயாரிப்பில் ஷிவானி செந்தில் இயக்கத்தில் சிவகுமார், பாடினி குமார், ராம்ஸ் ,  ஜான் விஜய் நடிப்பில் ஷிவானி செந்தில்  ஆகியோர் நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘டேக் டைவர்ஷன்’

ஐ டி நிறுவனத்தில் வேலை பார்க்கும் நாயகன் சிவகுமாருக்கு 4 வருடமாக பெண்  தேடியும் கிடைக்கவில்லை ஒரு நிலையில் முதன் முதலில் பார்த்த பெண்ணையே திருமணம் செய்து முடிவு செய்கிறார். பாண்டிச்சேரியில் நடக்க இருக்கும் நிச்சயதார்த்தத்துக்கு சென்னையில் இருந்து  சிவக்குமார் கிளம்பும் போது, அவருடைய அலுவலக மேலாளர் ஒரு வேலை கொடுக்கிறார்.  சக ஊழியரான பாடினி குமார்  2  நாளாகத் தொடர்பு கொள்ள முடியவில்லை என்றும் அவரைப் பார்த்து என்ன என்று தகவல் சொல்லி விட்டு நிச்சயதார்த்தத்துக்குப் போகும்படியும் கூறுகிறார்..

அந்தப் பெண்  தாதா  ராம்ஸ் பிடியில் இருப்பது தெரிகிறது . தாதாவை ஏமாற்றிவிட்டு பாடினி குமாருடன் சிவக்குமார் தப்பிக்கிறார் . ரவுடி கூட்டம் விடாமல் துரத்துகிறது. இதற்கிடையில்தான் நிச்சயதார்த்தம் செய்யவிருக்கும் பெண் காயத்ரி வழியில் சிவக்குமார் செல்லும் காரில் ஏறுகிறார். இறுதியில் சிவகுமாரின் நிச்சயதார்த்தம் நடந்ததா? இல்லையா?  என்பதே  ‘டேக் டைவர்ஷன்’ படத்தின் மீதிக்கதை.

நாயகனாக நடித்திருக்கும் சிவக்குமார் முதல் படம் போல் இல்லாமல் இயல்பான  நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். நாயகி பாடினி குமார் அழகாக இருக்கிறார் .நல்ல கதாபாத்திரங்கள் அமைந்தால் திறமையை வெளிப்படுத்துவார்.மற்றொரு  நாயகி காயத்ரி அழகாக வந்து அளவாக நடித்திருக்கிறார். ராம்ஸ் தாத்தா கதாப்பாத்திரத்தில் மனதில் நிற்கிறார்.

ஈஸ்வரன் தங்கவேலு ஒளிப்பதிவு பயண கதையின் களைப்பு தெரியாமல்  பார்த்துக்கொள்கிறது.ஜோஸ் பிராங்க்ளின் இசை கேட்கும் ரகம். வாழ்க்கை பாதையில் டேக் டைவர்ஷன் எடுக்க வேண்டி வந்தால் அதை துணிச்ச லாக எடுத்துச் செல்லும்போது நல்லதே நடக்கும் என்ற கருவை மையமாக கொண்டு நகைச்சுவையுடன் படத்தை இயக்கியிருக்கிறார் சிவானி செந்தில்.

நடிகர்கள் :  சிவக்குமார், பாடினி குமார், காயத்ரி, ஜான் விஜய், ராம்ஸ், விஜய் டிவி புகழ் ஜார்ஜ் விஜய்

இசை: ஜோஸ் ப்ரங்க்ளின்

இயக்கம்: சிவானி செந்தில்

மக்கள் தொடர்பு : சக்தி சரவணன்

Leave a Reply

Your email address will not be published.