புஷ்கர் & தயாரிப்பில் பிரம்மா.ஜி மற்றும் அனுசரண் இயக்கத்தில் பார்த்திபன், கதிர், ஐஸ்வர்யா ராஜேஷ், ஸ்ரேயா ரெட்டி ஆகியோர் நடிப்பில் அமேசான் ஒடிடி தளத்தில் வெளியாகியிருக்கும ‘சுழல்’.
மழைப் பகுதியில் உள்ள சிமெண்ட் தொழிற்சாலையின் தொழிற்சங்க தலைவராக இருக்கும் பார்த்திபனின் இளைய மகள் திடீரென்று காணாமல் போய் விட அவரை தேடும் முயற்சியில் பார்த்திபன் இறங்குகிறார். அப்போது தொழிற்சாலை தீ விபத்து தொடர்பாக பார்த்திபனை போலீஸ் கைது செய்கிறார்கள்.அவரது மூத்த மகளான ஐஸ்வர்யா ராஜேஷ் களத்தில் இறங்கு தனது தங்கையை தேடும் முயற்சியில் இறங்குகிறார். இதற்கிடையே பார்த்திபனுக்கு எதிராக வலுவான ஆதாரங்களை சேகரிக்கும் போலீஸ் அதிகாரிகள் ஸ்ரேயா ரெட்டி மற்றும் கதிருக்கு அவரது மகள் காணாமல் போன சம்பவம் தொடர்பாக அதிர்ச்சியான ஆதாரம் ஒன்று கிடைக்கிறது.
அந்த ஆதாரத்தின் மூலம் அவள் காணாமல் போகவில்லை கடத்தப்பட்டிருக்கிறாள், என்பது தெரியவர, அதன் பிறகு நடக்கும் சம்பவங்களை மிக சுவாரஸ்யமாக சொல்லி இருக்கும் வெப் சீரிஸ் சுழல்
இரண்டு பெண் குழந்தைகளுக்கு நத்தையாக நடித்திருக்கும் பார்த்திபன் மிக இயல்பாக நடித்திருக்கிறார். போலீஸ் இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் ஸ்ரே ரெட்டி, கதாப்பாத்திரற்கு பொருத்தமாக இருப்பதோடு நடிப்பிலும் ஸ்கோர் செய்கிறார். ஐஸ்வர்யா ராஜேஷ் கதாபாத்திரம் இனத்தக தொடரின் முக்கிய கதாபாத்திரமாக அமைத்திருக்கிறது.
சப் இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் கதிர் முழு கதையையும் தன் தோள் மீது சுமந்திருக்கிறார். தொடர் முழுவதும் வரும் அவரது கதாப்பாத்திரமும் அதற்கு ஏற்ப அவர் நடித்திருப்பதும் தொடருக்கு பலம் சேர்த்திருக்கிறது. ஹரிஹ் உத்தமன், குமரவேல், சந்தான பாரதி என தொடரில் நடித்திருக்கும் மற்ற நடிகர்களும் கொடுத்த வேலையை குறையில்லாமல் செய்திருக்கிறார்கள்.
சாம் சி.எஸ் பின்னணி இசையில் மிரட்டுகிறார்.அவரது பின்னணி இசை கதையின் வேகத்தையும் விறுவிறுப்பையும் அதிகரித்திருக்கிறது. முகேஷ்வரனின் ஒளிப்பதிவு பிரம்மாண்டமாக உள்ளது. மலைப்பகுதியின் அழகையும், இரவு நேர காட்சிகள் மற்றும் மயானகொள்ளை திருவிழா காட்சிகளை படமாக்கிய விதம் அருமை
8 எபிசோடாக உருவாகியுள்ள இத்தொடரின் முதல் 4 எபிசோட்களை பிரம்மா இயக்கியுள்ளார். 5 முதல் 8 வரையிலான எபிசோட்களை அனுசரண் எம். இயக்கியுள்ளார். இரண்டு இயக்கு னர்கள் இயக்கியிருந்தாலும் எந்த இடத்திலும் குழப்பம் ஏற்படாமலும், கிளைமாக்ஸ் வரை சஸ்பென்ஸ் உடையாமலும் இயக்கியிருப்பது முதலில் கதைக்குள் அவர்கள் எவ்வளவு ஈடுபாடு காட்டியிருக்கிறார்கள் என்பதை புரிந்து கொள்ளமுடிகிறது.
கதையில் முக்கிய புள்ளி ஒன்றாக இருந்தாலும் ஒவ்வொரு கதாபாத்திரத் துக்கும் கிளைக்கதைகள் சுவாரஸ் யத்தை தூண்டுகிறது.
Leave a Reply