அமேசான் பிரைம் வீடியோவின்  முதல் நீண்ட வடிவிலான அசல் தமிழ் தொடரான ‘சுழல் =தி வோர்டெக்ஸ்’ பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே வெளியானது. இந்த வலைதள தொடர் உலகளாவிய அளவில் பார்வையாளர்களின் இதயங்களையும், அவர்களது ஆன்மாக்களையும் வென்றிருக்கிறது. படைப்பாளிகளான புஷ்கர் & காயத்ரி இந்த தொடர் மூலம் தங்களின் திறமையை மீண்டும் நிரூபித்துள்ளனர். இந்த தொடரை பார்த்து ரசித்தவர்கள், இணையவாசிகள், திரைப்படத்துறையினர் என அனைவரும் கை வலிக்க கைகுலுக்கி படக்குழுவினரையும், இந்த தொடரையும் பாராட்டியுள்ளனர்.

பாலிவுட்டை சேர்ந்த இயக்குநர்கள் ஹன்சல் மேத்தா, அனுராக் காஷ்யப், நடிகை வித்யா பாலன், நடிகை பூமிகா பட்நாகர், நடிகர் விக்ராந்த் மாஸே, எழுத்தாளர் சேத்தன் பகத், தயாரிப்பாளர் குனீத். மோங்கா, நடிகர் தனுஷ், நடிகை சமந்தா, இசையமைப்பாளர் அனிரூத் உள்ளிட்ட கோலிவுட் பிரபலங்களும் தங்களது சமூக வலைதளப் பக்கத்தில் ‘சுழல் =தி வோர்டெக்ஸ்’ தொடரை கண்டு ரசித்த அனுபவத்தை பகிர்ந்திருக்கிறார்கள்.

நடிகர் தனுஷ் தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில், ”  சுழல் = தி வோர்டெக்ஸ் அற்புதமான கிரைம் திரில்லர் தொடர். முழுவதும் பார்வையாளர்களை கவர்ந்திழுக்கும் தொடர். இதில் நடித்திருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ், கதிர், ஸ்ரேயா ரெட்டி, ஆர். பார்த்திபன் உள்ளிட்ட குழுவினருக்கு என்னுடைய வாழ்த்துக்கள். இந்தத் தொடரை உருவாக்கிய புஷ்கர் மற்றும் காயத்ரி உண்மையிலேயே குறிப்பிடத்தக்க திறமைசாலிகள். அவர்களுக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்.” என பதிவிட்டிருக்கிறார்.

பிரபலமான இந்தி திரைப்பட இயக்குநர் ஹன்சல் மேத்தா தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில், ” சுழல் = தி வோர்டெக்ஸ் தொடரில் ஏதோ ஒரு ஈர்ப்பு இருக்கிறது. இந்தத் தொடரை முழுமையாக காண்பதற்கான விருப்பமும் இருக்கிறது. நுட்பமாக எழுதப்பட்ட திரைக்கதை மற்றும் ஒவ்வொரு கதாபாத்திரங்களும் நன்றாக விவரிக்கப்பட்டிருக்கிறது. இதனால் இந்த தொடர் முழுநீள கவர்ச்சியான துடிப்பான திரில்லர் என குறிப்பிடலாம்.” என பதிவிட்டிருக்கிறார்.

பாலிவுட் நடிகை வித்யாபாலன் தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில், ” சுழல் = தி வோர்டெக்ஸ் தொடருக்காகவும், ஸ்ரேயா ரெட்டியின் நடிப்பிற்காகவும் அனைவராலும் பாராட்டப்படுவார். ‘சுழல் =தி வோர்டெக்ஸ்’ எனும் பெயருக்கேற்றபடி உண்மையாக இந்த கிரைம் திரில்லர் ஒவ்வொரு அத்தியாயத்திலும் என்னை ஆழமாக இழுத்துச் செல்கிறது. ரெஜினாவாக நடித்திருக்கும் ஸ்ரேயா ரெட்டி அவர்களை இன்னும் சிறிது நேரத்தில் நீங்கள் காண இருக்கிறீர்கள். இதற்காகவே இந்தத் தொடரை அனைவரும் கண்டு ரசிக்க வேண்டும் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். இந்தத் தொடரில் நடித்த நடிகர்கள் அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்.” என‌ பதிவிட்டிருக்கிறார்.

நடிகை சமந்தா தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில், ” நான் எப்போதும் புஷ்கர் & காயத்திரி அவர்களின் படைப்புகளுக்கு ரசிகன். இந்த வார இறுதியில் ‘சுழல் = தி வோர்டெக்ஸ்’ தொடரை காண ஆவலுடன் காத்திருக்கிறேன். இதன் முன்னோட்டம் மிகவும் பரபரப்பாக இருந்தது. முழு தொடரும் பரபரப்பாக இருக்கும் என்று நான் நம்புகிறேன். ‘சுழல் = தி வோர்டெக்ஸ்’ தொடரின் குழுவினருக்கு வாழ்த்துக்களுடன் அன்பையும், அதிர்ஷ்டத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.” என பதிவிட்டிருக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published.