நடிகர் மாதவன் இயக்குனராக அறிமுகமாகும் பான்-இந்தியன் திரைப்படமான ‘ராக்கெட்ரி: தி நம்பி எஃபெக்ட் திரைப்படத்தை இயக்கத்தோடு படத்தின் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார். இப்படம் ஏற்கனவே உலகம் முழுவதும் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இஸ்ரோ ராக்கெட் விஞ்ஞானி ஸ்ரீ நம்பி நாராயணனின் வாழ்க்கையில் நடந்த உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்ட  இந்த திரைப்படம்… ஜூலை 1, 2022 அன்று உலகம் முழுவதும் வெளியாக உள்ளது.  இந்நிலையில், ஆர். மாதவன் பத்திரிகையாளர்களையும் ஊடகத் துறையினரையும் சந்தித்து ‘ராக்கெட்ரி’. படத்தை உருவாக்கியது பற்றி தனது அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்.

நடிகர் மற்றும் இயக்குநர் மாதவன் கூறியதாவது..,விக்ரம் வேதா படம் முடிந்ததும், இஸ்ரோ விஞ்ஞானியின் வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவங்களை வைத்து திரைப்படம் எடுக்க கூறி எனது நண்பர் பரிந்துரைத்தார். பாகிஸ்தான் ராணுவத்திற்கு தேசிய ரகசியத்தை தெரிவித்ததாக பொய்யாக குற்றம் சாட்டப்பட்டு சிறையில் சித்திரவதை செய்யப்பட்ட அந்த விஞ்ஞானி, சிறையில் இருந்து  வெளியே வந்த பிறகு தான் குற்றமற்றவர் என்பதை நிரூபித்தார். ஆரம்பத்தில், ஜேம்ஸ் பாண்ட் பாணியிலான கதையாக இருக்கிறதே என்ற தோற்றத்தை எனக்குக் கொடுத்ததால், இந்த கதையை எடுக்க நான் உற்சாகமாக இருந்தேன். என் அனுமானங்களுடன், நான் நம்பி நாராயணனைச் சந்தித்தேன், அது என் வாழ்க்கையின் பரிமாணத்தையே மாற்றியது. சரியாகச் சொல்வதானால், நம்பி நாராயணனைச் சந்திப்பதற்கு முன்பு இருந்த மாதவன், பின்பு இருந்த மாதவன் என என் வாழ்க்கையை நான் வகைப்படுத்துவேன். அவர் இந்தியாவின் அறிவார்ந்த மனிதர்களில் ஒருவர் என்று எனக்குத் தெரியும், ஆனால் நான் அவரைச் சந்தித்தபோது, அவரிடம் இருந்து ஒரு உணர்வுபூர்மான ஒளியை என்னால் காண முடிந்தது. அவரது உதடுகள் கோபத்தாலும் கவலையாலும் நடுங்கின, அதில் பேசுவதற்கு நிறைய இருந்தது. அவர் தனக்கு இழைக்கப்பட்ட அநீதியை நினைவுகூரத் தொடங்கியபோது, அவர் கிட்டத்தட்ட கொந்தளித்தார், நான் அவரை சமாதானபடுத்த விரும்பினேன். நான் சொன்னேன், “ஐயா, கடந்த காலங்கள் இருக்கட்டும். அனைத்து குற்றச்சாட்டுகளிலிருந்தும் நீங்கள் விடுவிக்கப்பட்டீர்கள். இப்போது கவலைப்பட ஒன்றுமில்லை என்று நினைக்கிறேன்.” என கூறினேன்.

ராக்கெட்ரி: தி நம்பி எஃபெக்ட் திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு !

Leave a Reply

Your email address will not be published.