குளோபல் எண்டர்டெயின்மெண்ட் பட நிறுவனம் சார்பில் தேனி பாரத் R. சுருளிவேல் தயாரிப்பில் இயக்குநர் செல்வ அன்பரசன் காமெடி கமர்ஷியல் படமாக உருவாகியுள்ள படம் ” பேய காணோம் “. தமிழ் சினிமாவில் முதல் முறையாக ஒரு படம் ரிலீஸாவதற்கு முன்பாகவே படத்திற்கு வெற்றிவிழாவினை படக்குழு கொண்டாடியுள்ளது. படப்பிடிப்பு முடிந்த நிலையில் இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா படக்குழுவினர் கலந்துகொள்ள பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் நேற்று நடைபெற்றது.

கோரோனா நோய் தொற்றுக்கு முன்னதாக ஆரம்பிக்கப்பட்ட இப்படம், பல இன்னல்கள் தடைகளை கடந்த நிலையில் தற்போது படப்பிடிப் முடித்துள்ளது. பல சிக்கல்களை கடந்து படப்பணிகள் முடிக்கப்பட்டதை படக்குழு வெற்றி விழாவாக கொண்டாடியது.

இந்நிகழ்வினில் தயாரிப்பாளர் R. சுருளிவேல் கூறியபோது

இயக்குநரை பல காலமாக தெரியும் அவரின் திறமையை கண்டு நீங்கள் படம் செய்யலாமே எனக் கேட்டேன் நல்ல தயாரிப்பாளர் அமைய வேண்டும் என்றார். நானே தயாரிக்கிறேன் எனக்கூறினேன் அப்படித்தான் இப்படம் ஆரம்பித்தது. இயக்குநர் செல்வ அன்பரசன் இப்படத்திற்கு நாயகியாக மீரா மிதுனை தேர்வு செய்யலாம் என்றார். ஆனால் அவர் பற்றி பொதுவில் நல்ல அபிப்ராயங்கள் இல்லை அதனால் வேண்டாம் என்றேன் ஆனால் இயக்குநர் அவர் பொருத்தமாக இருப்பார் படத்திற்கு பலமாக இருக்கும் என்றார் நானும் சரி என்றேன். ஆனால் அவர் வந்த போதிலிருந்தே பிரச்சனை செய்ய ஆரம்பித்தார். இயக்குநர் மீதே குற்றசாட்டு கூறினார். ஷீட்டிங்கில் பாதியில் கிளம்பி போய் விடுவார். திடீரென டில்லியில் இருக்கிறேன் விமான டிக்கெட் போட்டால் தான் வருவேன் என்பார். அவர் நிறைய தொல்லைகள் தந்தார். முதல்வர் ஸ்டாலினுடன் இணைந்து அவர் முதல்வர் ஆவதை நான் தடுப்பதாக என் மீதும் குற்றம் சுமத்தினார். படம் பாதி எடுக்கப்பட்டு விட்டதால் அவரை மாற்ற முடியவில்லை, அவரை போன்ற ஒருவரை வைத்து கொண்டு இப்படத்தின் படப்பிடிப்பை முடித்தது மிகப்பெரிய விசயம். இப்படத்திற்கு பல தடைகள் வந்தது அதையெல்லாம் கடந்து இன்று படத்தை முடித்துள்ளோம் அதற்காக தான் இந்த வெற்றி விழா. எங்கள் படம் நல்லதொரு காமெடி படமாக வந்துள்ளது.

இந்த படத்தில் மீரா மிதுன் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். மற்றும் இயக்குனர் தருண் கோபி, கௌசிக், சந்தியா ராமச்சந்திரன், கோதண்டம், முல்லை, ஜெயா டிவி ஜேக்கப், செல்வகுமார் மற்றும் ஜாக்குவார் தங்கம் ஆகியோர் நடித்துள்ளனர்.

மீரா மிதுன் முதல்வர் கனவை நான் கெடுப்பதாக புகார் சொன்னார் – தயாரிப்பாளர் குற்றச்சாட்டு

Leave a Reply

Your email address will not be published.