“ஜோதி” திரைப்படத்தின் “ஆரிராரோ” என்ற இரண்டாம் பாடல் வெளியீட்டின் சிறப்பு நிகழ்ச்சிக்காக Radio City FMல் படக்குழுவினர் கலந்துகொண்டனர். அப்போது அங்கு வந்திருந்த காவல்துறை DSP அய்யா, காவல் துறைக்கே சவாலான கடலூரில் நடந்த மனதை உலுக்கும் உண்மை சம்பவமாகிய குழந்தை திருட்டை வைத்து, அதை முழுநீள திரைப்படமாக எடுத்ததிற்கு படக்குழுவினரை மிகவும் பாராட்டி மேலும் இதுபோன்ற உண்மை சம்பவங்களை சமூக விழிப்புணர்வுக்காக மேலும் பலபடங்கள் எடுக்க வேண்டும் என்று ஊக்குவித்தார்.

நிகழ்ச்சியின்போது இயக்குனர் “AV கிருஷ்ண பரமாத்மா” கூறியதாவது. “சென்றவாரம் “போவதெங்கே” என்ற காதல் பாடல் வெளியானது அதை தொடர்ந்து “ஆரிராரோ” என்ற அப்பாவுக்கும் மகளுக்குமான உறவை சொல்லும் விதமாக அமைந்துள்ள இரண்டாம் பாடலை இப்போது வெளியிடுகிறோம். இப்பாடல், ஹர்ஷவர்தன் ரமேஷ்வர் இசையாலும் கார்த்திக் நேத்தா வரிகளாலும், பல்ராம் சாரோட குரலாலும் மிகவும் அழகாக வந்திருக்கிறது. குழந்தைகளை பெற்ற அப்பாக்களும்,அப்பாக்களை போற்றும் குழந்தைகளுக்கும் இப்பாடல் திரும்ப திரும்ப கேட்க கூடியதாக அமைந்திருக்கிறது என்பதில் சந்தேகமில்லை. இந்த படம் ஒரு குறிப்பிட்ட சமூக பிரச்சனைக்கு தீர்வாகவும், ரொம்ப எமோஷனலாகவும், திரில்லராகவும் வந்திருக்கிறது. முன்காண் காட்சியை பார்த்தவர்கள் அனைவரும் கண்கலங்கி இப்படியொரு படம் வருவது பெரியவிசியம் என பாராட்டினர். இது எனக்கு மிகப்பெரிய நம்பிக்கையை கொடுத்திருக்கு நிச்சயம் வெற்றிபெரும்” என கூறினார்.

நடிகர் “வெற்றி” கூரியதாவது. “இந்தபடம் 8 தோட்டாக்கள் படத்தின் நீட்சி என்றே சொல்லலாம். காரணம், அந்த படத்துல என் பொருளான துப்பாக்கியை தொலைத்துவிட்டு அதை கண்டுபிடிக்க தேடி அலைவேன், இந்த படத்துல ஒரு கர்ப்பிணி பெண்ணிடமிருந்து திருடப்பட்ட குழந்தையை கண்டுபிடிக்க தேடி அலைவேன். இந்தபடத்தோட ஸ்கிரிப்ட் கேட்டவுடன் ஸ்கிரிப்ட் நல்லாருக்கு, ஆனா புது teamமா இருக்கு எப்படி பண்ணபோறாங்கனு நெனைச்சேன், சூட்டிங் ஸ்பாட்டுக்குபோய் அவுங்க மேக்கிங் ஸ்டைலை பார்த்ததும் மிரண்டுவிட்டேன். ரொம்ப experience teamன்னு தெரிஞ்சிது. TEAM மேல முழு நம்பிக்கை வந்துடுச்சி. முப்பது நாள் இரவு பகலா ஒரே SCEDULEலில் எடுத்து முடித்துவிட்டனர்.அதுலாம் டீமோட ஆசாத்தியமான விசியம். தயாரிப்பாளர் அனுப்பிய ஆடியன்ஸ் review வீடியோவை பார்த்தேன் .நா நெனைச்ச மாதிரியே படம் நல்லா வந்திருக்கு. இந்த படம் பட்டித்தொட்டியெங்கும் சென்று எனக்கு தாய்மார்களின் அன்பை பெற்றுத்தரும் என்று நம்புகிறேன்.”என கூறினார்.

“ஜோதி” திரைப்படத்தின் “ஆரிராரோ” என்ற இரண்டாம் பாடல் வெளியீடு

Leave a Reply

Your email address will not be published.