எம் என் எம் பிலிம்ஸ் சார்பில் அரவிந்த் சிங் தயாரிப்பில் ;விஜய் குமார் ராஜேந்திரன்  இயக்கத்தில் அருள் நிதி, அவந்திகா, விஜய் குமார் ராஜேந்திரன், உமா ரியாஸ் ஆகியோர் நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘டி பிளாக்’

அடர்ந்த காட்டுக்குள் இருக்கும் தனியார்  பொறியியல் கல்லூரி  அந்த கல்லூரியில் முதலாமாண்டு மாணவனாக சேருகிறார் நாயகன் அருள்நிதி. கல்லூரியின் டி பிளாக்கில் இருக்கும் லேடிஸ் ஹாஸ்டலில் ஒரு பெண் மர்மமான முறையில் இறந்து போக, சுற்றி காடாக இருப்பதால் சிறுத்தை  தான் காரணம் என்று கல்லூரி நிர்வாகம் சொல்கிறது. ஆனால், அந்த கொலைக்கு சிறுத்தை காரணம் அல்ல என்பதை கண்டுபிடிக்கும் நாயகன்  அருள்நிதி, கொலைக்கான உண்மையான காரணத்தை கண்டுபிடித்தாரா? இல்லையா?, என்பதே  ‘டி பிளாக்’ மீதிக்கதை.

அருள்நிதி கல்லூரி மாணவர் வேடத்திற்கு கச்சிதமாக பொருந்துகிறார்.கல்லூரி மாணவன் என்பதால் கூடுதல் கலகலப்பும் சேர்ந்துள்ளது. உண்மையில் இவரது கதை தேர்வு ஒவ்வொரு படத்திற்கும் எதிர்ப்பார்ப்பை அதிகரிக்க செய்கிறது  நாயகியாக நடித்திருக்கும் அவந்திகா மிஸ்ரா தனது பணியை சரியாக செய்து முடித்திருக்கிறார்

இயக்குநர் விஜய்குமார் ராஜேந்திரன், ஆதித்யா கதிர், தலைவாசல் விஜய், ரமேஷ் கண்ணா, காளி என்ற கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கும் சரண்தீப் என அனைவரும் கதாப்பாத்திரத்திற்கு ஏற்ப சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.

அரவிந்த் சிங்கின் ஒளிப்பதிவு காட்சிகளை விருவிருக்க செய்கிறது. அதிலும் லேடிஸ் ஹாஸ்டல் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளுக்கான காட்சியமைப்புகள் அருமை.இசையமைப்பாளர் ரோன் எத்தன் யோஹனின் பாடல்கள் மற்றும் கெளசிக் கிரிஷின் பின்னணி இசை,  படத்திற்கு பக்க பலமாக இருக்கிறார்கள்.

கதை எழுதி இயக்கியிருக்கும் எரும சாணி விஜய், எளிமையான கருவை வைத்துக்கொண்டு சுவாரஸ்யமான திரைக்கதை அமைத்திருக்கிறார். முழுக்க முழுக்க ஒரு கல்லூரியை மையமாக வைத்து ஒரு முழுமையான சஸ்பென்ஸ் த்ரில்லர்  திரைப்படத்தை கொடுத்திருக்கிறார்.பரபரப்பு விறுவிறுப்பு திரில் திகில் என்று சிறப்பாக படத்தை இயக்கியிருக்கிறார்.

மொத்தத்தில்  ‘டி பிளாக்’  திகில்

நடிகர்கள் : அருள் நிதி, அவந்திகா, விஜய் குமார் ராஜேந்திரன், உமா ரியாஸ்

இசை : ரான் ஏதன் யோகன்

இயக்கம்: விஜய் குமார் ராஜேந்திரன்.

மக்கள் தொடபு : சுரேஷ்  சந்திரா

Leave a Reply

Your email address will not be published.