டிரம்ஸ்டிக் புரொடக்ஷன்ஸ்  தயாரிப்பில்  ஹரி. இயக்கத்தில் ஜி.வி. பிரகாஷ் இசையில்  அருண் விஜய், பிரியா பவானி ஷங்கர், ராதிகா சரத்குமார், சமுத்திரக்கனி ஆகியோர் நடிப்பில் வெளியாகி இருக்கும் ’யானை’

ராமநாதபுரம் மாவட்டத்தின் கௌரவமாக வாழ்ந்து வருபவர்கள் பிஆர்வி குடும்பம் முதல் தாரத்து மகன்கள் சமுத்திரக்கனி, போஸ் வெங்கட், சஞ்சீவ், இரண்டாம் தாரத்து மகன் அருண் விஜய். குடும்பம் மீதும் அண்ணன்கள் மீதும் அளவு கடந்த பாசத்துடன் இருந்தாலும் அவரது அண்ணன்கள் அவரை தனது தந்தையின் இரண்டாம் தாரத்து பிள்ளையாகவே பார்க்கிறார்கள். இதற்கிடையே சிறையில் இருந்து விடுதலையாகும் அருண் விஜயின் குடும்ப எதிரியான ராமச்சந்திர ராஜு, அருண் விஜயின் குடும்பத்தாரை கொலை செய்ய துடிக்கிறார்.

அதை சுமுகமாக முடிக்க நினைக்கிறார் அருண் விஜய். அதற்காக அவர் பல முயற்சிகளை எடுக்கிறார். ஆனால், அனைத்து முயற்சியும் தோல்வியிலேயே முடிகிறது. இந்த சமயத்தில் பிஆர்வி குடும்பத்தை ஒட்டுமொத்தமாக உருக்குலையும் விதத்தில் சம்பவம் ஒன்று நிகழ்கிறது.அருண் விஜய்க்கு அவரது அண்ணன்கள் துரோகி என்ற முத்தியை குத்தி வீட்டை விட்டு வெளியேற்றுகிறார்கள். இதை சாதகமாக பயன்படுத்திக்கொள்ளும் வில்லன் ராமச்சந்திர ராஜு, அருண் விஜயின் அண்ணன்களை அழிக்க முடிவு செய்ய, அவர்களை அருண் விஜய் காப்பாற்றினாரா?, இல்லையா? என்பதே ’யானை’ படத்தின் மீதிக்கதை.

இயக்குநர் ஹரி இயக்கத்தில் முதல் முறையாக நடித்திருக்கும் அருண் விஜய், தனது அதிரடி ஆக்‌ஷன் மற்றும் நடிப்பு மூலம் ‘யானை’ என்ற தலைப்புக்கு நூறு சதவீதம் நியாயம் சேர்த்துள்ளார். தனது குடும்பத்திற்கு ஆபத்து என்று தெரிந்ததும் பதறும் காட்சியில் பக்குவமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.

நாயகி பிரியா பவானி ஷங்கர் அழகில் கவர்ந்து, கொடுத்த பாத்திரத்தை குறையில்லாமல் செய்துள்ளார். இவரை விட அருண் விஜய் அன்னான் மகளாக வரும் அம்மு அபிராமி கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்.

யோகி பாபு வரும் இடங்கள் அனைத்தும் சிரிப்பு வெடி. அதிலும், இமான் அண்ணாச்சியை வைத்து யோகி பாபு கலாய்க்கும் காட்சிகள் திரையரங்கே அதிரும் வகையில் மக்களை சிரிக்க வைக்கிறது. அருண் விஜயின் அம்மாவாக நடித்திருக்கும் ராதிகா, தனது அனுபவ நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.

ஜிவி பிரகாஷின் இசையில் பாடல்கள் சில ரசிக்கும்படி உள்ளது, பின்னணி இசையும் கதைக்கு ஏற்ப பயணிக்கிறது. கோபிநாத்தின் ஒளிப்பதிவில் ராமேஸ்வரம், தூத்துக்குடி ஏரியாக்களில் வரும் காட்சிகள்,அனைத்துமே ரசிக்குபடி அமைந்துள்ளது.

இயக்குநர் ஹரி படம் என்றாலே வேகத்திற்கும் விறுவிறுப்புக்கும் பஞ்சமிருக்காது. அப்படி வேகமான மற்றும் விறுவிறுப்பான திரைக்கதை மற்றும் காட்சியமைப்போடுஇருக்கும் படம் பல இடங்களில் தனது வேகத்தை குறைத்து கதாப்பாத்திரங்களின் உணர்வுகளையும், நடிகர்களின் நடிப்பையும் ரசிகர்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில் இயக்குநர் ஹரி இப்படத்தை இயக்கியிருக்கிறார்.

நடிகர்கள்: அருண் விஜய், பிரியா பவானி ஷங்கர், ராதிகா சரத்குமார், சமுத்திரக்கனி

இசை: ஜி.வி. பிரகாஷ்

இயக்கம்: ஹரி.

மக்கள் தொடபு : சதீஷ்

Leave a Reply

Your email address will not be published.