அர்கா மீடியா தயாரிப்பில் இயக்குநர் பல்லவி கங்கி ரெட்டி இயக்கத்தில் ரெஜினா கஸண்ட்ரா, நிவேதிதா சதீஷ் நடிப்பில் ; ஆஹா தமிழ் ஓ டி டி தளத்தில் வெளியாகி இருக்கும் ஆன்யாஸ் டுட்டோரியல்

ரெஜினா கஸன்ட்ராவும் நிவேதிதா சதீஷும் அக்கா தங்கை. நிவேதிதா தன் அம்மாவிடமும், அக்கா ரெஜினாவிடமும் கோபித்துக்கொண்டு வீட்டைவிட்டு வெளியேறி தனியாக ஒரு வீட்டில் தங்கியிருக்கிறார். தனியாக என்றால் சாதாரண தனிமையில்லை. ஒரு பெரிய அபார்ட்மென்டில் ஒரேயொரு வீட்டில் அவர் மட்டுமே வசிக்கிற சூழ்நிலை! அது மக்கள் எல்லோரும் வீட்டுக்குள்ளேயே முடங்கிய கொரோனா ஊரடங்கு காலகட்டம் வேறு!

நிவேதிதா சமூகவலைதளங்களில் பிஸியாக இருப்பவர். அன்யா’ஸ் டுடோரியல் என இன்ஸ்டாகிராமில் தனக்கென ஒரு பக்கம் உருவாக்கி அதன் மூலம் தன்னை பின் தொடர்பவர்களை பரபரப்பாக வைத்துக்கொள்ள, ஒப்பனை செய்வது கொள்வது எப்படி என கற்றுக் கொடுப்பதிலிருந்து ஏதேதோ செய்கிறார். இறுதியில் அன்யாவின் உடலில் ஒரு தீய சக்தி நுழைந்து கொண்டு ஆட்டுவிக்கிறது.தங்கையைக் காப்பாற்ற அக்கா என்ன செய்கிறார்? அன்யா பேயிலிருந்து மீண்டாரா இல்லையா என்பதே ஆன்யாஸ் டுட்டோரியல் வெப் சீரியஸ் மீதிக்கதை.

ரெஜினா. நிவேதிதா சதீஷ் இருவரும் தங்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கும் கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார்கள். விஜய் சக்கரவர்த்தியின் ஒளிப்பதிவும் ஒலி வடிவமைப்பும் பலம் சேர்க்கிறது.

ஏழு அத்தியாயங்களைக் கொண்ட இத்தொடரில் ஆரம்பத்தில் இணைய தொடர்களில் உரிய சூத்திரத்தில் கதை நகர்ந்தாலும் போக போக விறுவிறுப்பு கூடி பரபரப்பு களை கட்டுகிறது..படத்தில் ரத்தக்களரியைத் தவிர்த்து இருந்தால் குடும்பத்தினருடன் பார்க்கும் படியாக இருக்கும்.இயக்கம் பல்லவி கஞ்சி ரெட்டி,ஒரு பெண்ணா இப்படிச் சிந்தித்து இயக்கியிருக்கிறார் என்று வியக்க வைக்கிறது.

Leave a Reply

Your email address will not be published.