ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்க்ரீன் தயாரிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் ராம் பொத்தினேனி, கீர்த்தி ஷெட்டி, ஆதி, நதியா ஆகியோர் நடிப்பில் வெளியாகியிருக்கும் ’தி வாரியர்’
நாயகன் ராம் சென்னையில் மருத்துவம் படித்துவிட்டு மதுரை அரசு பொதுமருத்துவமனையில் மருத்துவராகப் பணியாற்றப் போகிறார் .மதுரையை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ரவுடி ஆதியின் அராஜகத்தை பார்த்து அதிர்ந்து போகும் ராம், ஆதியின் அராஜகத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் முயற்சியில் இறங்குகிறார். ஆனால், ஆதி அவரை பொது இடத்தில் வைத்து அடித்து தொங்க விடுகிறார். உயிருக்கு போராடும் நிலையில் அங்கிருந்து தப்பித்து செல்லும் ராம் .
2 வருடங்களுக்குப் பிறகு அதே மதுரைக்கு டிஎஸ்பி ஆக திரும்புகிறார் ராம். ஆதியின் கொட்டத்தை அடக்கி, மதுரையை அமைதிப்பூங்காவாக மாற்ற களம் இறங்குகிறார். அதில் ராம் வெற்றி பெற்றாரா இல்லையா என்பதே ‘தி வாரியர்’ படத்தின் மீதிக்கதை
தெலுங்கு சினிமாவில் பிரபல நாயகனாக அறியப்படும் ராம் பொத்தினேனிக்கு தமிழ் சினிமாவில் இது தான் முதல் படம் என்றாலும், தமிழ் ரசிகர்களுக்கும் பிடிக்கும் வகையில் நடித்திருக்கிறார்.மருத்துவர் மற்றும் காவல்துறை அதிகாரி என இரண்டு கெட்டப்புகளிலும் வித்தியாசத்தை காட்டியிருப்பவர், நடிப்பிலும் வித்தியாசத்தை காட்டி அசத்தியிருக்கிறார்.
விசில் மகாலட்சுமி எனும் பெயரில் வானொலி தொகுப்பாளராக வருகிறார். நாயகி கீர்த்திஷெட்டி, ஆளும் அழகு, நடிப்பும் நன்று,அவர் அடிக்கும் விசில் இளைஞர்களைக் கவரும். வில்லனாக நடித்திருக்கும் ஆதியின் கெட்டப்பில் இருக்கும் மிரட்டல், நதியா, ஜெயப்பிரகாஷ், அக்ஷராகவுடா உள்ளிட்ட நிறைய நடிகர்கள் படத்தில் இருக்கிறார்கள். இவர்கள் அனைவருமே தங்கள் வேலைகளைச் சரியாகச் செய்திருக்கிறார்கள். ஒரே காட்சியில் வரும் ரெடின்கிங்ஸ்லியின் நகைச்சுவை படத்துக்குப் பலம்.
தேவிஸ்ரீபிரசாத்தின் இசையில் பாடல்கள் துள்ளல் ரகம். பின்னணி இசை படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது சுஜித் வாசுதேவின் ஒளிப்பதிவு காதல் காட்சிகளை கலர்புல்லாகவும், ஆக்ஷன் காட்சிகளை ஆக்ரோஷமாகவும் படம் பிடித்துக்காட்டியிருக்கிறார்.
கலர்புல்லான காதல் மற்றும் ஆக்ஷன் காட்சிகள் மூலம் ரசிக்க வைத்திருக்கும் இயக்குநர் லிங்குசாமி, தெலுங்கு ரசிகர்களை கவரும் வகையில் பெரும்பாலான காட்சிகளை அமைத்திருக்கிறார். மதுரையில் நடப்பது போல் வைத்துவிட்டு, துளி கூட மதுரையை காட்டாதது படத்துடன் ஒன்றவிடாமல் செய்கிறது.
நடிகர்கள்: ராம் பொத்தினேனி, கீர்த்தி ஷெட்டி, ஆதி .
இசை: தேவி ஸ்ரீ பிரசாத்
இயக்கம்: N.லிங்குசாமி.
மக்கள் :தொடர்பு சுரேஷ் சந்திரா
Leave a Reply