மாஸ் சினிமாஸ் சார்பில் சாம் ஜோன்ஸ் தயாரிப்பில் கே.தாமரை செல்வன் இயக்கத்தில் சாம் ஜோன்ஸ், ஆனந்தி, கரு பழனியப்பன், வேல ராமமூர்த்தி, ஏ.வெங்கடேஷ், முனிஷ்காந்த், ஆகியோர் நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘நதி’
நடுத்தர குடும்பத்தை சேர்ந்த நாயகன் சாம் ஜோன்ஸும் அரசியல்வாதி குடும்பத்தை சேர்ந்த நாயகி ஆனந்தியும் ஒரே கல்லூரியில் படிக்கிறார்கள். இருவரும் நண்பர்களாக பழகுகிறார்கள். ஆனந்தியின் குடும்பத்தின் மீது இருக்கும் பகையால், அவர் சாம் ஜோன்ஸை காதலிப்பதாக கரு.பழனியப்பன் வதந்தி கிளப்பு விடுகிறார். இதனால் ஆத்திரமடைந்த ஆனந்தியின் குடும்பத்தினர் சாம் ஜோன்சை சம்மந்தமில்லாத ஒரு கேசில் மாட்டி விடுகின்றனர், நண்பர் சாம் ஜோன்சை அந்த கேஸிலிருந்து வெளியே எடுக்க அனந்தி போராடுகிறார், இறுதியில் நாயகனை சிறையில் இருந்து வெளியே கொண்டு வந்தாரா? இல்லையா? என்பதே ‘நதி’படத்தின் மீதிக்கதை.
எளிமையாக , அழகாக, பாந்தமாக இருக்கிறார் சாம் ஜோன்ஸ். இயல்பாக , பொருத்தமாக நடிக்கிறார் .தோற்றம் உயரம் எல்லாமே மண் சார்ந்த கதாபாத்திரங்களுக்கு அவ்வளவு பொருத்தமாக விதத்தில் இருக்கிறது. தயாரிப்பாளராகவும் சிறப்பாக செயல்பட்டுள்ளார்
நாயகி ஆனந்தி படத்துக்குப் பெரும் பலமாக இருக்கிறார். காதலில் விழும் காட்சிகள், கடைசியில் காட்டும் உறுதி ஆகியன அவருக்கு மேலும் சிறப்புச் சேர்க்கின்றன.
நாயகனின் அப்பாவாக நடித்திருக்கும் முனீஸ்காந்த்துக்கு நல்லவேடம். அவரும் அதைப் பொறுப்பாகச் செய்து வரவேற்புப் பெறுகிறார்.
நாயகியின் அப்பா இயக்குநர் ஏ.வெங்கடேஷ், நாயகியின் பெரியப்பாவாக நடித்திருக்கும் வேலராமமூர்த்தி, நாயகியின் தாய்மாமனாக நடித்திருக்கும் இயக்குநர் கரு.பழனியப்பன் ஆகியோர் நடிப்பு படத்திற்கு பலம் சேர்க்கிறது.
எம்.எஸ்.பிரபுவின் ஒளிப்பதிவில் மதுரை மற்றும் சுற்றுவட்டாரங்கள் தத்ரூபமாக இருக்கின்றன. திபுநினன்தாமஸ் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம் , பின்னணி இசை சிறப்பு
உண்மை சம்பவத்தை மையமாக வைத்து அமைக்கப்பட்டுள்ள திரைக்கதை பரபரப்பாக கையை நகர்த்தி சென்றிருக்கிறார் இயக்குநர் தாமரை செல்வன்
நடிகர்கள் : சாம் ஜோன்ஸ், ஆனந்தி, கரு பழனியப்பன், வேல ராமமூர்த்தி, ஏ.வெங்கடேஷ், முனிஷ்காந்த்,
இசை: திபு நினன் தாமஸ்
இயக்கம்: கே.தாமரை செல்வன்
மக்கள் தொடர்பு : சதீஷ் (AIM)
Leave a Reply