வைட் கார்பட் பிலிம்ஸ் விஜய் பாண்டி.கே மற்றும் பிஜி மீடியா வொர்க்ஸ் தயாரிப்பில் அரவிந்த் ஸ்ரீனிவாசன்.இயக்கத்தில் அருள்நிதி, மதுபாலா, ஸ்ம்ருதி வெங்கட், அச்யுத் குமார், காளி வெங்கட் ஆகியோர் நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘தேஜாவு’
எழுத்தாளர் அச்யுத் குமார் என்பவர் அவர் புதிதாக எழுதி வரும் கதையில் என்ன இருக்கிறதோ அதுதான் தற்போது நடக்கிறது. தமிழ்நாடு காவல்துறை டிஜிபியாக இருக்கிறார் மதுபாலா. இவருடைய மகள் ஸ்ருதி வெங்கடை சிலர் கடத்தி விடுகிறார்கள். அதைப் பற்றி விசாரிப்பதற்காக அருள்நிதி அண்டர்கவர் ஆபீஸராக வருகிறார்.
தீவிர விசாரணையில் இறங்கும் அருள்நிதிக்கு திடுக்கிடும் உண்மைகள் தெரியவருகிறது. இறுதியில் மதுபாலாவின் மகள் ஸ்ம்ருதி வெங்கட் எதற்காக கடத்தப்பட்டார்? யாரால் கடத்தப்பட்டார்? என்பதே ‘தேஜாவு’படத்தின் மீதிக்கதை.
காவல்துறை அதிகாரி வேடத்திற்கு ஏற்ற தோற்றம், உடம் மொழி என்று கச்சிதமாக பொருந்தும் அருள்நிதி, நடிப்பிலும் அசத்தியிருக்கிறார். உயர் அதிகாரியாக வரும் மதுபாலா, மகளைக் காணாமல் தவிப்பது, எதையும் கண்டுபிடிக்க முடியாமல் குழம்புவது என நிறைவான நடிப்பைக் கொடுத்திருக்கிறார்.நடிகை ஸ்ம்ருதி வெங்கட் தனக்கு கொடுத்த கதாபாத்திரத்தை கச்சிதமாக செய்துள்ளார்.
எழுத்தாளராக நடித்திருக்கும் அச்யுத்குமார், போலீஸாக நடித்திருக்கும் காளி வெங்கட், ஸ்முருதி வெங்கட் என படத்தில் வரும் மற்ற கதாப்பாத்திரங்களும் அவர்களுடைய நடிப்பும் காட்சிகளின் சுவாரஸ்யத்தை அதிகரிக்க செய்திருக்கிறது.
ஜிப்ரானின் பின்னணி இசை பல காட்சிகளில் கூடுதல் விறுவிறுப்பை ஏற்படுத்தி இருக்கிறது. பி.ஜி.முத்தையாவின் ஓளிப்பதிவு கதைக்கு ஏற்ப பயணித்திருக்கிறது.
இணையதள பத்திரிகையாளராகவும், படங்களின் விமர்சகராகவும் இருந்து இன்று அருள்நிதியை வைத்து தேஜாவு என்ற படத்தை இயக்கியிருக்கும் அறிமுக இயக்குனர் – அரவிந்த் ஸ்ரீனிவாசன் முதல் படத்திலேயே கவனம் ஈர்க்கிற அளவுக்கு அட்டகாசம் பண்ணியிருக்கிறார் படத்தின் ஆரம்பத்திலேயே நம்மை கதைக்குள் இழுத்துச் செல்லும் இயக்குநர் அரவிந்த் சீனிவாசன், காட்சிகளை வேகமாக நகர்த்தினாலும் தான் சொல்ல வந்ததை மிக தெளிவாகவும், சுவாரஸ்யமாகவும் சொல்லியிருக்கிறார்.
நடிகர்கள்: அருள்நிதி, மதுபாலா, ஸ்ம்ருதி வெங்கட், அச்யுத் குமார், காளி வெங்கட் மற்றும் பலர்.
இசை: ஜிப்ரான்
இயக்கம்: அர்விந்த் ஸ்ரீநிவாசன்.
மக்கள் தொடர்பு : சதீஷ் (AIM)
Leave a Reply