தென்னிந்திய நடிகர் சங்க பொதுச்செயலாளர், தயாரிப்பாளர் மற்றும் நடிகர் விஷால் நடிப்பில் உருவாகி இருக்கும் லத்தி படத்தின் பிரமாண்ட டீஸர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இப்படத்தை வினோத் குமார் இயக்க, ராணா புரோடக்ஷன்ஸ் சார்பில் நடிகர்கள் ரமணாவும், நந்தாவும் தயாரிக்கிறார்கள். அப்படத்தில் நடித்த நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொண்டு பேசியதாவது :

நடிகர் விஷால் பேசும்போது,

லத்தியால் நான் அடி வாங்கியதில்லை. ஆனால், பீட்டர் ஹெயின் தவிர இந்த படத்தில் அடி வாங்காத ஆள் இல்லை. டீஸரில் ‘ஊர்ல இருக்க பொறுக்கி பொறம்போக்கு எல்லாம் என்னை போட்டு தள்ள தாண்டா தேதி குறிச்சீங்க.. இப்ப எவனும் தப்பிக்க முடியாது வாங்கடா’ என்உ படத்தில் நான் பேசும் இந்த வசனம் எனக்கு மிகவும் பிடிக்கும்.

,நடிகர், தயாரிப்பாளர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் பேசும்போது,

லத்தி சார்ஜ் படக்குழுவினர் அனைவர்க்கும் நன்றி. நான் நீண்ட காலமாக முயற்சி செய்து கொண்டிருக்கிறேன். ஆனால், நீங்கள் இருவரும் சுலபமாக கால்ஷீட் வாங்கி விட்டீர்கள். சரியோ தவறோ நாங்கள் இதுவரை நட்பாக இருக்கிறோம். நானும் விஷாலும் சேர்ந்து படம் பண்ண வேண்டியது. ஆனால், இது வரை நடக்கவில்லை. நானும் விஷாலும் பள்ளிக்கு ஒன்றாக சென்றோம்.. கல்லூரிக்கு ஒன்றாக சென்றோம்.. அவ்வளவுதான் .. அதற்கு மேல் சொல்ல முடியாது.

விஷால் இதற்கு முன்னதாக அசிஸ்டன்ட் கமிஷனர், கமிஷனர் என அனைத்து கதாபாத்திரத்திலும் நடித்து தற்போது ப்ரோமோஷனில் கான்ஸ்டபிள் ஆகியுள்ளான். நான் சமீபத்தில் நடித்த நெஞ்சுக்கு நீதி திரைப்படத்தில் சண்டை, பாட்டு என ஏதும் இருக்காது. நான் தேர்வு செய்யும் கதையில் சண்டை இருக்காது. ஆனல் விஷால் அதற்கு நேர்மாறாக இருப்பான்.

இந்த படத்தில் நடிக்கும் போது விஷாலுக்கு நிறைய அடிபட்டது என கேள்விப்பட்டேன். இவ்வளவு மெனக்கெடலுக்கு வாழ்த்துக்கள். இந்த படத்தை பார்த்தல் விஷால் திரையை விட்டு வெளியே வந்து அடித்து விடுவார் போல காட்சிகள் இருக்கிறது. அவ்வளவு ஆக்‌ஷன் காட்சிகள். அதே போல் நடிகர் சங்கம் கட்டிடத்தை விரைவில் கட்டவேண்டுமென கேட்டுக்கொள்கிறேன். விஷால் அதை வைத்து தான் கல்யாணம் செய்துகொள்ளாமல் ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்.

பாலு சார் என்னுடைய ஒளிப்பதிவாளர். அவருக்கு வாழ்த்துக்கள். அவர் ஒரு நடிகருடன் வேலை செய்தால் அவருடனே தான் சிறு காலம் பயணிப்பார். விஷாலுடன் இது அவருக்கு நான்காவது படம். சுனைனா ரெட் ஜெயண்ட் நிறுவனத்தில் ‘நீர் பறவை’ என்ற படத்தில் நடித்திருந்தார்கள். அவருக்கும் வாழ்த்துக்கள்.

லத்தி படத்தின் டீஸரைப் பார்த்தால் விஷால் திரைக்கு வெளியே வந்து அடித்து விடுவார் போல இருக்கிறது; நிறைய அடிபட்டு நடித்திருக்கிறார்! – உதயநிதி ஸ்டாலின்

Leave a Reply

Your email address will not be published.