ஷாலினி ஆர்ட்ஸ், ஜாக் மன்ஞ்சு தயாரிப்பில் அனூப் பண்டாரி. இயக்கத்தில் கிச்சா சுதீப், நிரூப் பண்டாரி, நீதா அசோக், ஜாக்குலின் பெர்னாண்டஸ் ஆகியோர் நடிப்பில் வெளியாகியிருக்கும் ’விக்ராந்த் ரோணா’
கமருட்டு என்ற கிராமத்தில் வசிக்கும் பள்ளி சிறுவர்கள் திடீர் திடீரென்று கடத்தப்பட்டு மர்மனான முறையில் கொலை செய்யப்படுகிறார்கள். அந்த கிராமத்துக்கு புதிய போலீஸ் இன்ஸ் பெக்டராக வருகிறார் கிச்சா சுதீப் கொலைகளுக்கான காரணத்தை கண்டுபிடிக்க தீவிரமான விசாரணையில் ஈரான் இறங்குகிறார்.. இதில் கிச்சா சுதீப்பின் குழந்தையும் பலியாகிறது. இறுதியில் கிச்சா சுதீப், உண்மை குற்றவாளிகளை கண்டுபிடித்தாரா? இல்லையா? என்பதே ’விக்ராந்த் ரோணா’ படத்தின் மீதிக்கதை.
நாயகன் கிச்சா சுதீப், தனது வழக்கமான அதிரடி நடிப்பால் அசத்தியிருக்கிறார். காக்கி சட்டை போடாத போலீஸாக வரும் சுதீப்பின் நடிப்பு படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்திருக்கிறது. ஊர் பெரிய புள்ளியாக வரும் மதுசூதன ராவ் , அவரது மகனாக வரும் நிரூப் பண்டாரி, இவரது காதலியாக நீதா அசோக் என் அனைத்து கதாபாத்திரங்களும் படத்தின் கதை நகர்விற்கு துணை நிற்கின்றனர்
கன்னட படம் என்றாலும் படத்தில் இடம்பெறும் வசனங்கள் டப்பிங் படம் என்ற உணர்வு ஏற்படாத வகையில் அமைந்துள்ளது படத்தில் 3டி காட்சிகள் பிளஸ். கண்களை குத்துவதுபோல் ஈட்டியும், கத்தியும் பறந்து வருமபோது தலையை நாம் தன்னிச்சையாக திருப்பி ஆச்சர்யத்தில் மூழ்கடிக்கிறது.
ஒரே ஒரு பாட்டுக்கு நடனம் ஆடியிருக்கும் ஜாக்குலின் ஃபெர்னாண்டஸ் தனது நடனம் மூலம் அனைவரையும் கவர்கிறார். அஜ்னீஸ் லோக்நாத் இசை அதிரடி காட்டியிருக்கிறது. ரா ரா ராக்கம்மா பாடல் விசிலடிக்க வைக்கிறது.பின்னணி இசை கதைக்கு ஏற்ப பயணித்துள்ளது.
ஒளிப்பதிவாளர் வில்லியம் டேவிட் வித்தியாசமான முறையில் காட்சிகளை படமாக்கியிருக்கிறார். படத்தின் அனைத்துக் காட்சிகளும் இருட்டில் நடப்பது போலவே படமாக்கியிருக்கிறார்.
கதை எழுதி இயக்கியிருக்கும் அனுப் பண்டாரி, வித்தியாசமான முறையில் படமாக்கியிருக்கிறார். படத்தில் இடம்பெறும் பல ட்விஸ்ட்டுகள் படத்தின் சுவாரஸ்யத்தை அதிகரிக்க செய்திருக்கிறது.சஸ்பென்ஸ் மாறாமல் கடைசிவரை கொண்டு சென்றிருக்கிறார்.
மொத்தத்தில் விக்ராந்த் ரோணா’ – சஸ்பென்ஸ் த்ரில்லர்
நடிகர்கள்: கிச்சா சுதீப், நிரூப் பண்டாரி, நீதா அசோக், ஜாக்குலின் பெர்னாண்டஸ் மற்றும் பலர்.
இசை: அஜனீஸ் லோக்நாத்
இயக்கம்: அனூப் பண்டாரி.
Leave a Reply