டார்க் ரூம் பிக்சர்ஸ் மற்றும் மினி ஸ்டுடியோஸ் சார்பில் எஸ். வினோத் குமார் தயாரிப்பில் சந்தோஷ் பி ஜெயக்குமார் இயக்கத்தில் பிரபு தேவா, வரலட்சுமி சரத், பிரகாஷ்ராஜ், ஆழியா, ஜான் கொகேன், ஜெகன், ஷியாம், ரைசா வில்சன் ஆகியோர் நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘பொய்க்கால் குதிரை’

நாயகன் பிரபுதேவா விபத்து ஒன்றில் மனைவியையும் தனது ஒரு காலையும் இழந்து விடுகிறார். ஒரு காலை இழந்தாலும்  தனது மகளுடன் சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் பிரபுதேவாவின் மகளுக்கு இதயத்தில் பிரச்சனை ஏற்படுகிறது. அவளைக் காப்பாற்ற 70 லட்சம்  ரூபாய் தேவைப்படுகிறது.

பணத்திற்காக பிரபுதேவா பலரிடம் உதவி கேட்கிறார். ஆனால், யாருமே உதவ முன்வரவில்லை. இந்த சூழலில் பிரபல தொழில் அதிபரான வரலஷ்மியின்  மகளை கடத்தி பணம் சம்பாதிக்க திட்டம் போடுகிறார் பிரபு தேவா. இந்த கடத்தல் முயற்சியில் பிரபு தேவா மாட்டிக்கொள்கிறார்.. இறுதியில் கடத்தல் பிரச்சனையில் இருந்து மீண்டாரா? தன் குழந்தையின் உயிரை காப்பாற்றினாரா? இல்லையா? என்பதே ‘பொய்க்கால் குதிரை’ படத்தின் மீதிக்கதை.

நாயகன் பிரபுதேவா  ஒரு கால் இல்லாதவராகவும், மகள் வாங்கிக் கொடுக்கும் பிராஸ்தெடிக் காலுடன் நடிக்கும் காட்சிகளிலும், ஆரம்பத்தில் வரும் ஓப்பனிங் பாடல் மற்றும் பேருந்தில் பேட் டச் செய்யும் பொறுக்கிகளை அடித்து வெளுப்பதும் என அசத்தி உள்ளார்.

பிரபுதேவாவின் மகளாக நடித்திருக்கும் குழந்தையும் தனக்கு கொடுத்த வேலையை கச்சிதமாக செய்திருக்கிறார். பிரபுதேவாவுக்கு ஜோடியாக இல்லாவிட்டாலும் பக்கத்து வீட்டு பெண்ணாக வரும் ரைசா வில்சன்  கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்.

பிரபுதேவாவுக்கு இணையான இன்னொரு பெண் பாத்திரத்தில் நடித்திருக்கும்  வரலட்சுமி சரத்குமார்.   கதாபாத்திரமாகவே வாழ்ந்த்திருக்கிறார். வரலக்‌ஷ்மி சரத்குமாரின் கணவராக கதாபாத்திரத்தில் நடித்திருக்கும்  ஜான் கொகேன் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திஇருக்கிறார்.

பிரபு தேவாவின் நண்பனாக வரும்  ஜெகன் காமெடிக்கு மட்டுமே பயன்பட்டு இருக்கிறார் என்று நினைத்தால் ஒரு கட்டத்தில் நம்மைப் பதற வைக்கவும் செய்கிறார்  இமான் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம்.  பல்லுவின் ஒளிப்பதிவும் சிறப்பு.

 ஆபாச படங்களை மட்டுமே இயக்கும் இயக்குநர் என்கிற பெயரை மாற்ற சந்தோஷ் பி. ஜெயக்குமார் போராடியிருப்பது நன்றாகவே தெரிகிறது. இந்த உணர்ச்சிப் போராட்ட கதைக்குள் உறுப்புகளை திருடி விற்பதற்காக குழந்தைகளை கடத்தும் கும்பல், எளியவர்களின் பிரச்சனையை உதவி செய்கிறேன் பேர்வழி என்று என்ஜிஓக்களிடம் இவர்களை காட்டி காசு பறிக்கும் இணையதளங்கள், நோயாளிகளிடம் பணம் பறிப்பது ஒன்றையே குறிக்கோளாக வைத்து செயல்படும் தனியார் மருத்துவமனைகள் அனைவரின் தோலையும் உரித்து சமூகப் பிரச்சினைகளையும் சாடியிருக்கிறார் சந்தோஷ் பி ஜெயக்குமார்.

நடிகர்கள் :  பிரபு தேவா, வரலட்சுமி சரத், பிரகாஷ்ராஜ், ஆழியா, ஜான் கொகேன், ஜெகன், ஷியாம், ரைசா வில்சன்,

இசை: டி.இமான்

இயக்கம்: சந்தோஷ் பி ஜெயகுமார்

மக்கள் தொடபு : யுவராஜ்

Leave a Reply

Your email address will not be published.