2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் சூர்யா தயாரித்து வழங்கும் படம் “விருமன்”.
முத்தையா இயக்கும் இப்படத்தில் கார்த்தி, அதிதி சங்கர், சூரி, சரண்யா பொன்வண்ணன், ராஜ்கிரண், இளவரசு, பிரகாஷ் ராஜ், மனோஜ் பாரதிராஜா, சிங்கம் புலி என பலர் நடித்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். வருகிற ஆகஸ்ட் 12ம் தேதி பிரமாண்டமாக வெளியாகும் விருமன் திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது.
நடிகை அதிதி பேசும்போது,
என் கனவை நிறைவேற்றிய அப்பா, அம்மா, தங்கைக்கு நன்றி. என் வீட்டை விட்டு நான் எங்கும் சென்றதில்லை. அந்த குறை தெரியாமல் பார்த்து கொண்ட 2டி நிறுவனத்திற்கும், படக்குழுவிற்கும் நன்றி. முத்தையா எல்லாவற்றையும் ஊக்கப்படுத்திக் கற்றுக் கொடுத்தார். இப்படத்தில் பாடுவதற்கு வாய்ப்புக் கொடுத்த யுவன் சாருக்கு நன்றி. கார்த்தி சார் தினமும் நிறைய விஷயங்களைக் கற்றுக் கொடுப்பார். சூரி சாருடன் நடிக்கும் காட்சிகளில் ஏதாவது நகைச்சுவை சொல்லிக் கொண்டிருப்பேன். ராஜ்கிரண் மற்றும் பிரகாஷ் ராஜ் சாருடன் பணியாற்றியதில் மகிழ்ச்சி.
கார்த்தி சார் போலவே நானும் முதல் படமாக மண் சார்ந்த படத்தில் நடித்திருக்கிறேன் என்றார்.
நடிகர் கார்த்தி பேசும்போது,
இப்படத்தின் டிரைலர் வரும்வரை பதட்டமாகத்தான் இருந்தது. அயல்நாட்டு மொழிப் படங்களைப் பார்த்து கலாச்சாரம் மாறி விட்டதா? நமது மண் சார்ந்த படங்களுக்கு ஆதரவு இருக்காதோ? ஏனென்றால், கிராமத்தில் கூட ஸ்விக்கி, ஸொமேட்டோ வந்துவிட்டது. ஆனால், டிரைலர் வெளியாகி வெற்றிப் பெற்றதும் அந்த எண்ணம் மாறிவிட்டது.
பருத்தி வீரன் பாணி கொம்பனில் வரக் கூடாது என்று கவனமாக இருப்பேன். கடைக்குட்டி சிங்கத்தில் 5 அக்காவிற்கு தம்பியாக இருக்க வேண்டும். முன் படத்தின் சாயல் வரக் கூடாது என்று எண்ணுவேன்.
ஷோபி மாஸ்டர் எனக்கு என்ன வருமோ அதை உணர்ந்து கொடுப்பார். கிராம வாழ்க்கை தான் அழகாக இருக்கிறது. அந்த கதாபாத்திரம் ஏற்று நடிக்கும்போது சுகமாக இருக்கிறது.
என் மாமனாருக்கு என்னுடம் பேச மிகவும் பிடிக்கும் ஆனால், எனது தோளை தொட்டுவிட்டு சென்று விடுவார். நானே வலிய சென்று பேசி அவரிடம் பேசுவேன். உலக அரசியல் வரைக்கும் அனைத்தையும் அறிந்து வைத்திருப்பார். எப்படி என்று கேட்டால், எல்லாம் டீ கடையில் தான் என்பார்.
ராஜ்கிரண் சார் நடிக்கிறார் என்று கூறியதும் நம்பிக்கை வந்துவிட்டது.
காசு வாங்காமல் நடிப்பேன் ஆனால், சம்பளம் வாங்காமல் நடிக்க மாட்டேன், என்பார் பிரகாஷ் ராஜ் சார். கலைஞன் என்றால் பணத்தைப் பொருட்படுத்தாமல் நடிக்க வேண்டும் என்ற அழகான விஷயத்தை பிரகாஷ் ராஜ் கற்றுக் கொடுத்தார்.
விடியற்காலை 3 மணிக்கு பாடல் காட்சிகளை பதிவு செய்தார்கள். அந்த நேரத்தில் சினேகன் வரிகள் பாடலுக்கு அழகு சேர்த்துள்ளது. சூரி அண்ணன் நடிகர் என்றே தோன்றாது. குட்டி இயக்குனர் போலவே இருப்பார். சிறு இடம் கிடைத்தாலும் பஞ்ச் வசனங்களை இயல்பாக பேசிவிடுவார். உலகத்தில் எந்த மூலையில் இருந்தாலும் குடும்பத்தில் உள்ளவர்களுக்கு ஏதாவது பிரச்னை என்றால் உடனே ஓடிப் போய்விடுவார்.
Leave a Reply