அமலாபால் தயாரிப்பில் அறிமுக இயக்குனர் அனூப் பணிக்கர் இயக்கத்தில் அமலா பால், ஹரிஷ் உத்தமன், திரிகுன், வினோத் சாகர், அதுல்யா ரவி, ரித்விகா ஆகியோர் நடிப்பில் நேரடியாக டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஒடிடி தளத்தில் வெளியாகி இருக்கும் ‘கடாவர்’
மருத்துவர் ஒருவர் காரோடு வைத்து எரித்து கொலை செய்யப்படுகிறான் .அவன் எப்படி கொலை செய்யப்பட்டார் என்பதை காவல் அதிகாரி ஹரீஸ் உத்தமன் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார். இவருக்கு உறுதுணையாக தடவியல் நிபுணரான அமலா பால் உதவி செய்கிறார். . இந்த கொலைக்கும் சிறையில் இருக்கும் திரிகுனுக்கும் தொடர்பு இருப்பது போலீஸ் விசாரணையில் தெரியவருகிறது. ஆனால், சிறையில் இருக்கும் திரிகுனால் எப்படி கொலை செய்ய முடியும்? திரிகுனுக்கு வெளியில் இருந்து உதவும் அந்த கொலைகாரன் யார்? கொலைக்கான காரணம் என்ன ? என்பதே ‘கடாவர்’ படத்தின் மீதிக்கதை.
அமலா பால் டாக்டர் பத்ரா கதாபாத்திரத்தில் மிரட்டி உள்ளார். அமலா பாலின் ஹேர் ஸ்டைலில் மட்டும் மாற்றம் இல்லை ஒட்டுமொத்தமாக வேறுவிதமான நடிப்பை வெளிப்படுத்தி ஸ்கோர் செய்துள்ளார் அனுபவம் மிக்க நடிப்பு மூலம் தனது கதாப்பாத்திரத்திற்கு பலம் சேர்த்திருக்கும் அமலா பால்
காவல்துறை அதிகாரியாக நடித்திருக்கும் ஹரிஷ் உத்தமன், அதுல்யாவின் கணவராக நடித்திருக்கும் திரிகுன், அமலா பாலின் உதவியாளராக வரும் வினோத் சாகர், முனிஷ்காந்த், ரித்விகா சிங் என படத்தில் வரும் அனைத்து நடிகர்களும் கதாப்பாத்திரங்களுக்கு ஏற்ற தேர்வாக இருப்பதோடு, கதையோடு பயணிக்கும் கதாப்பாத்திரங்களாகவும் இருக்கிறார்கள்.
அரவிந்த் சிங் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.ரஞ்சின் ராஜின் இசையில் பாடல்கள் இனிமையாக இருக்கிறது. பின்னணி இசை படத்திற்கு பலம்.அமலாபால் கதை நாயகியாக மட்டுமல்லாமல் முதன்முறையாக இப்படம் மூலம் தயாரிப்பாளராகவும் ஆகியிருக்கிறார். முதல் பட தயாரிப்பிலேயே வெற்றியும் கண்டிருக்கிறார்.
இயக்குபர் அனூப் பனிக்கர் திரில்லர் படம் இயக்க வாய்ப்பு கிடைத்துவிட்டது என்பதற்க்காக கமர்ஷியல் அம்சங்களை கட்டிக்கொண்டு உருலாமல் நம்பும்படியான இயற்கையான நகர்வுகளுடன் இயக்கியிருப்பது படத்தை தூக்கி நிறுத்துகிறது. நடிகர், நடிகையர்களின் நடிப்பு மட்டுமல்லாமல் அவர்களை அந்தந்த பாத்திரங்களாக மாற்றியிருப்பது நம்பும்படிடான கதை அம்சமும் அதை எதர்த்தமாக இயக்கிய இயக்குனரின் சாமர்த்தியமும் முக்கிய காரணம். படம் பார்ப்பவர்கள் நிச்சயம் பாராட்டும் வகையில் இருக்கும் இந்த ‘கடாவர்’
நடிகர்கள் : அமலா பால், ஹரிஷ் உத்தமன், திரிகுன், வினோத் சாகர், அதுல்யா ரவி, ரித்விகா
இசை: ரஞ்சின் ராஜ்
இயக்கம்: அனூப் பணிக்கர்
மக்கள் தொடர்பு : ஸ்ரீவெங்கடேஷ்
Leave a Reply