செவன்த் ஸ்க்ரீன் ஸ்டுடியோ தயாரிப்பில் அஜய் ஞானமுத்து. இயக்கத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் விக்ரம், ஸ்ரீநிதி ஷெட்டி, இர்பான் பதான், ரோஷன் மேத்திவ், மிருணாளினி ரவி , மீனாக்ஷி கோவிந்தராஜன் ஆகியோர் நடிப்பில் வெளியாகி இருக்கும் ’கோப்ரா’

கணக்கு வாத்தியாராக இருக்கும் நாயகன் விக்ரம். ஸ்காட்லாந்து நாட்டு இளவரசரை கொலை செய்கிறார். இதை தொடர்ந்து பல முக்கிய புள்ளிகளை கொலை செய்கிறார். இந்த கொலைகள் பற்றி விசாரிக்கும் இண்டர்போல் ஆபிஸராக வரும் இர்பான் பதான், கொலையாளி ஒரு கணித மேதாவி என்பதை கண்டுபிடிப்பதோடு, அதை வைத்தே குற்றவாளியை பிடிக்க முயற்சிக்கிறார். அப்போது அவருக்கு பல முக்கிய தகவல்கள் கிடைக்கின்றன. இறுதியில் விக்ரமை இன்டர்போல் ஆபிசர் இர்பான் பதான் கண்டுபிடித்தாரா? முக்கிய அதிகாரிகளை விக்ரம் கொலை செய்ய காரணம் என்ன? என்பதே ’கோப்ரா’ படத்தின் மீதிக்கதை.

நாயகனாக நடித்திருக்கும் விக்ரம், பல வித்தியாசமான தோற்றங்களில் நடித்து ஆச்சரியப்படுத்தி இருக்கிறார்.விக்ரமின் உழைப்பும், நடிப்பும் படத்திற்கு மிகப்பெரிய பலம் சேர்த்துள்ளது. ரொமான்ஸ் சென்டிமென்ட் ஆகிய காட்சிகளில் அதிக ஸ்கோர் செய்து இருக்கிறார். குறிப்பாக கிளைமாக்ஸ் காட்சியில் அற்புதமாக நடித்து கைத்தட்டல் வாங்குகிறார்.

விக்ரமின் காதலியாக நடித்திருக்கும் நாயகி ஶ்ரீநிதி ஷெட்டி, விக்ரமை துரத்தி துரத்தி காதலித்து அவர் மனதில் மட்டுமில்லாமல் ரசிகர்கள் மனதிலும் இடம் பிடித்து விடுகிறார். மிருணாளினி, மீனாக்‌ஷி கதையோடு பயணிக்கும் கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். மீனாட்சி மற்றும் மிருணாளினி இருவருக்கும் கொடுத்த வேலையை குறையில்லாமல் செய்திருக்கிறார்கள்.

இன்டர்போல் அதிகாரியாக வரும் முன்னாள் கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் முதல் படத்திலேயே நடிப்பில் அசத்தியிருக்கிறார். கே.எஸ்.ரவிக்குமார், ஆனந்த்ராஜ் ஆகியோர் அனுபவ நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.வில்லனாக வரும் ரோஷன் மேத்யூ தமிழ் சினிமாவின் வழக்கமான கார்ப்பரேட் வில்லனாக வருகிறார்.

ஏ.ஆர்.ரஹ்மானின் இசையில் பாடல்கள் கேட்கும் ரகமாக இருக்கிறது. பின்னணி இசை காட்சிகளுக்கு வலு சேர்க்கிறது.. ஒளிப்பதிவாளர் புவன் ஸ்ரீனிவாசன் காட்சிகளை பிரம்மாண்டமாக படமாகியிருக்கிறார். விக்ரமின் வித்தியாசமான கெட்டப்புகள் மற்றும் அதை காட்டிய விதம் சிறப்பாக உள்ளது.

படத்தை ஆரம்பம் முதல் முடிவு வரை விறுவிறுப்பாக நகர்த்தி செல்லும் இயக்குநர் அஜய் ஞானமுத்து, புத்திசாலித்தனமான திரைக்கதை மூலம் நம்மை சீட் நுணியில் உட்கார வைக்கிறார். ஆங்காங்கே சில குறைபாடுகள் தான் மற்றபடி ரசிகர்களுக்கு ஒரு கமர்சியல் படமாக இருக்கும் ’கோப்ரா’

நடிகர்கள்: விக்ரம், ஸ்ரீநிதி ஷெட்டி, இர்பான் பதான், ரோஷன் மேத்திவ், மிருணாளினி ரவி , மீனாக்ஷி கோவிந்தராஜன்

இசை: ஏ.ஆர்.ரஹ்மான்

இயக்கம்: அஜய் ஞானமுத்து.

மக்கள் தொடர்பு : யுவராஜ்

Leave a Reply

Your email address will not be published.