கனெக்டிங் டாட்ஸ்  நிறுவனம் தயாரிப்பில் கார்த்திக் மதுசூதன்  இயக்கத்தில் கார்த்திக் மதுசூதன், ஷ்ரிதா சிவதாஸ், ஜீவா ரவி, ஸ்ரீ ரஞ்சனி, சனா ஷாலினி, ஜீவி மதுசூதன், உத்ரா ஆகியோர் நடிப்பில் வெளியாகி இருக்கும் “டூடி”

பெங்களூருவில் பப்பில் இசைக்கலைஞராக இருக்கும் நாயகன் கார்த்திக் மதுசூதன் 3 முறை காதல் தோல்வி காரணமாக வாழ்க்கையில் இனி காதலும் இல்லை, கல்யாணமும் இல்லை என்று முடிவு செய்து குடியும், குட்டியுமாக இருக்கிறார். தனது நண்பனின் திருமணத்தில் நாயகி ஷ்ரிதா சிவதாஸ் சந்திக்கிறார். அவரையும் தன் வலையில் வீழ்த்த முயல்கிறார் கார்த்திக். ஆனால் அவர் கார்த்திக் பேச்சில் மயங்கினாலும் அவரது இஷ்டத்துக்கு சம்மதிக்க மறுக்கிறார். ஒரு கட்டத்தில் கார்த்திக் மீது காதல்வசப்படுகிறார் ஷ்ரிதா .அந்தக் காதலை ஏற்கமறுக்கிறார் கார்த்திக்.

சில நாட்களுக்கு பிறகு கார்த்திக்கு, ஷ்ரிதா மீது காதல் வர. அப்போது, நான் 5 வருடங்களாக ஒருவரை காதலித்து வருகிறேன் என்கிறார் நாயகி. ஷ்ரிதா அதைக்கேட்டு கோபப்படும் கார்த்திக் அவரை வெறுத்து பிரிகிறார் இறுதியில் கார்த்திக் – ஷ்ரிதா இருவரும் வாழ்க்கையில் ஒன்று சேர்ந்தார்களா? இல்லையா? என்பதே “டூடி” படத்தின் மீதிக்கதை.

பெண்களுடன் சுற்றித்திரியும் கதாபாத்திரத்தில் எதார்த்த நடிப்ப்பை வெளிப்படுத்தியிருக்கும் .நாயகன் கார்த்திக் மதுசூதனன் நரைத்த தாடியுடன் 33 வயதுக்காரராக நடிப்பில் அறிமுகம் போன்று தெரியவில்லை இயல்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.நாயகியாக நடித்திருக்கும் ஷ்ரிதா சிவதாஸ் அனுபவ நடிப்பை வெளிப்படுத்தி படத்திற்கு பக்க பலமாக நிற்கிறார்.

நாயகியின் பெற்றோராக வரும் ஜீவா ரவி, ஸ்ரீரஞ்சனி, நாற்பது ஆண்டுகளாக காதல் குறையாமல் கணவன் மனைவியாக வாழும் ஜீவி மதுசூதன், உத்ரா, மற்றும் நாயகனின் நண்பர்களாக வரும் நடிகர்கள் என அனைவரும் இயல்பான நடிப்பைக் கொடுத்திருக்கிறார்கள்.

இசையமைப்பாளர் கே.சி.பாலசாரங்கன் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம் பின்னணி இசையில் சிறிது கவனம் செலுத்தியிருக்கலாமோ என்ற எண்ணம். தோன்றுகிறது .மதன் சுந்தர்ராஜ் மற்றும் சுனில் ஜி.என் ஆகியோரது ஒளிப்பதிவு கதைக்கு ஏற்வாறு அமைந்த்திருக்கிறது.

கதை எழுதி கதாநாயகனாகவும் நடித்திருக்கும் கார்த்திக் மதுசூதன், சாம் ஆர்.டி.எக்ஸ் உடன் இணைந்து படத்தை இயக்கவும் செய்திருக்கிறார். வழக்கமான காதல் கதை போன்று இல்லாமல்
காதல் தோல்வி என்று யாரையும் சாகடிக்காமல் காதல் தோல்வியை பெரிதாக எடுத்துக் கொள்ளத் தேவையில்லை என்று ஒரு மெசேஜ் சொல்லி இருக்கிறார்.

நடிகர்கள் : கார்த்திக் மதுசூதன், ஷ்ரிதா சிவதாஸ், ஜீவா ரவி, ஸ்ரீ ரஞ்சனி, சனா ஷாலினி, ஜீவி மதுசூதன், உத்ரா

இசை: கே.சி.பாலசாரங்கன்

இயக்கம்: கார்த்திக் மதுசூதனன், சாம் ஆர்.டி எக்ஸ்.

மக்கள் தொடர்பு : மணவை புவன்

Leave a Reply

Your email address will not be published.